உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருக்களவஞ்சி

யாப்பு

389

போர்க்களத்தில் இறந்த குதிரையுடலையும், யானை யுடலையும், மனிதருடலையும் நாயும் பேயும் காகமும் கழுகுந் தின்று களித்துப் பாடிய சிறப்பைப் பாடுவது செருக்களவஞ்சி யாகும்.

செவியறிவுறூஉ

வியப்பின்றி உயர்ந்தோர்கள் நயந்தொழுகல் கடனென அரசர் முதலியோர்க்கு மருட்பாவால் அறவுரை கூறுவது செவியறிவுறூஉ என்று பெயர் பெறும்.

சொற்சீரடி

கட்டுரை

வகையினால் எண்ணொடு சேர்ந்து நாற்சீரடியின்றி முச்சீரடியானும், இருசீரடியானும் ஒழிந்த அசையினையுடைய தாகியும், ஒரு சீரின் கண்ணே பிறிதொரு சீர் வரத் தொடாது ஓசை வரத் தொடுப்பதும், சொற்றானே சீராந்தன்மையைப் பெற்று நிற்பதும் ஆகிய இவ்வியல்போடு நடப்பது சொற்சீரடியாகும். கட்டுரையாவது பாட்டின்றித் தொடுக்கப்படுவது; எண்ணென்பது ஈரடியாற் பலவாகியும் ஓரடியாற்பலவாகியும் வருதல்.

சொற்பொருத்தம்

முதலில் எடுத்துக் கொண்ட மூவசைச் சீரியவாகிய சொற்கள் மங்கலத்தவாயினும், வகையுளி சேர்ந்தனவும், சிறப்பில் சொல்லும், பலபொருட் கேற்ற சொல்லும், பொருளில் சொல்லும், தோன்றல் திரிதல், கெடுதல் என்னும் விகாரச் சொற்களும் வாழ்த்துப் பாடலின்கண் இடம் பெறாமற் காத்தல் வேண்டும். தசாங்கத்தியல்

அரசனுடைய பத்து அரசியலுறுப்புக்களைக் குறித்துப் பத்து ஆசிரிய விருத்தங்கள் பாடுவது

தசாங்கம்=பத்துறுப்பு.

தசாங்கப்பத்து

நேரிசை வெண்பாவினால் அரசனுடைய பத்துறுப்புக் களைப் புகழ்ந்து பத்துச் செய்யுள் பாடுவது.

தண்டகமாலை

வெண்பாவினால் முன்னூறு செய்யுட்கள் பாடுவது தண்ட க மாலையாகும்.