உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

இளங்குமரனார் தமிழ்வளம்

4

தரவிணைக் கொச்சகக் கலிப்பா

து இரண்டு வகைப்படும்.

(1) இடையே தனிச்சொல் பெற்றும், பெறாமலும், இரண்டு தரவுகளைப் பெற்று நடப்பது இயற்றரவிணைக் கொச்சமாகும்.

(2) தனிச்சொல்லை இடையில் பெற்று இரண்டு தரவோடு சுரிதகமும் பெற்று நடப்பது சுரிதகத் தரவிணைக் கொச்சக மாகும். இதனை தரவிணைக் கொச்சக ஒருபோகு என்றும் அழைப்பர்.

L

எடு:-

“வார்பணிய தாமத்தால் வளைக்கையோர் வண்டோச்ச ஊர்பணிய மதியம்போ னெடுங்குடைக்கீ ழுலாப்போந்தான் கூர்பணிய வேற்றானைக் கொற்கையார் கோமானே அவர்க்கண்டு

பூமலர் நறுங்கோதை புலம்பலைப்ப நறுங்கொண்டல் தூமலர்க்கண் மடவார்க்குத் தொல்பகையே யன்றியும் காவலற்குப் பெரியதோர் கடனாகிக் கிடவாதே’

இது தனிச்சொல்லை இடையிலே பெற்ற இரண்டு தரவு களைக் கொண்ட இயற்றர விணைக் கொச்சகம்.

தரவுக் கொச்சகக் கலிப்பா

கலிப்பாவின் முதல் உறுப்பான தரவு மட்டும் பெற்று வருவதும், தரவோடு தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று நடப்பதும் தரவுக் கொச்சகக் கலிப்பாகும். ஒரு தரவோடு நிற்பதை இயற்றரவு கொச்சகமென்றும், தரவோடு தனிச்சொல்லும், சுரிதகமும் பெற்றும் நடப்பதைச் சுரிதகத் தரவு என்றும் வேறுபடுத்திக் கூறுவர்.

எடு:-

"செல்வப்போர் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.

99

இஃது தரவு மட்டும் பெற்று வந்த இயற்றரவு கொச்சகம்.