உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

391

தளை

நின்ற சீரின் ஈற்றசையோடு வருஞ்சீரின் முதலசை ஒன்றி யேனும் ஒன்றாதேனுங் கூடி நிற்பது தளையாம். நேர்முன் நேரும், நிரைமுன் நிரையும் வருதல் ஒன்றிவருதலாம். நேர்முன் நிரையும், நிரைமுன் நேரும் வருதல் ஒன்றாதுவருதலாம். அத்தளை நேரொன்றாசிரியத்தளை, வண்சீர் வெண் வெண்டளை, இயற்சீர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றா வஞ்சித்தளை கலித்தளை என எழுவகைப் படும்.

தாண்டகம்:-

நிரையொன்றாசிரியத்தளை,

இருபத்தேழு எழுத்து முதலாகவுயர்ந்த எழுத்தடியினவாய் குருவும் இலகுவும் ஒத்து வருவன அளவியற்றாண்டகமெனவும்; எழுத்தொவ்வாதும் எழுத்தலகொவ்வாதும் வந்தன அளவழி தாண்டகமெனவும்; ஒருபொருளைக் குறித்துப் பத்துச் செய்யு ளாகக் கூறுவது தாண்டகமெனவுங் கூறுவர்.

தாரகை மா மாலை:-

கண்ணகியைப் போன்ற கற்பினையுடைய மகளிர்க்குள்ள இயற்கைக் குணங்களை வகுப்பிற் கூறுவது தாரகை மாலையெனப் பெறும்.

தானைமாலை

அகவலோசையிற் கெடாமல் ஆசிரியப் பாவினால் முன்ன ரெடுத்துச் செல்லுங்கொடிப் படையைப் பாடுவது தானை L மாலையாகும்.

தும்பை மாலை

தும்பைப் பூமாலை சூடிப் பகைவரோடு போர் செய்தலைக் கூறுவது தும்பை மாலையாகும்.

துள்ளலோசை

ஓசை உயர்ந்தும் தாழ்ந்தும் துள்ளி நடக்கும் ஓசை துள்ள லோசையாகும். இ) வ்வோசை கலிப்பாவிற்கு உரியது. இவ்வோசை ஏந்திசைத்துள்ளலோசை, அகவல்துள்ளலோசை, பிரிந்திசைத்துள்ளலோசை என மூவகைப்படும். கலித்தளையால் வருங்கலிப்பா ஏந்திசைத் துள்ளலோசையைப் பெறும். வெண்சீர் வெண்டளையுங் கலித்தளையும் விரவி வருங்கலிப்பா அகவல் துள்ளலோசையைப் பெறும். கலித்தளையோடு பிறதளைகளும் விரவிவருங் கலிப்பா பிரிந்திசைத் துள்ளலோசையைப் பெறும்.