உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

தூங்கலோசை

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எழுச்சியும் விரைவுமின்றி இடையிடையே தாழ்ந்து ஒலிக்கும் ஓசை தூங்கலோசையாகும். இவ்வோசை வஞ்சிப்பாவிற்குரியது. இவ்வோசை ஏந்திசைத் தூங்கலோசை, அகவல் தூங்கலோசை, பிரிந்திசைத் தூங்கலோசை என மூவகைப்படும். ஒன்றிய வஞ்சித் தளையால் வரும் வஞ்சிப்பா ஏந்திசைத் தூங்கலோசையைப் பெறும். ஒன்றாத வஞ்சித்தளையால் வரும் வஞ்சிப்பா அகவல் தூங்கலோசையைப் பெறும். இருவித வஞ்சித்தளைகளும் விரவி வரும் வஞ்சிப்பா பிரிந்திசைத் தூங்கலோசையைப் பெறும்.

தூது:-

ஆண்பாலும் பெண்பாலும் அவரவர் காதலைப் பாணன் முதலிய உயர்திணையோடும், கிளி, மேகம் முதலிய அஃறிணை யோடுஞ் சொல்லித் தூது போய் வாவெனக் கலிவெண்பாவாற் கூறுவது தூது என்னும் நூலாகும். தூது செல்வோரை மற்றவரைக் காட்டிலும் சிறப்பித்து உயர்த்திக் கூறிப் பாடுதல் வேண்டும்.

தொகை நிலைச் செய்யுள்:- அ

பொருளாலேனும்

அளவாலேனும் விளக்கமாகத் தொகுத்துப் பாடப் பெறுவது தொகை நிலைச் செய்யுள். இஃதன்றித் தொகுக்கப்பட்ட செய்யுட்களையுடை நூலெனவுங் கூறுவர்.

தொகைநிலைச் செய்யுள்:- ஆ

ஒரு செய்யுளோடு மற்றொரு செய்யுளுக்குத் தொடர்பு யாதுமின்றித் தனித் தனியே ஒரு பொருள் உணர்த்துஞ் செய்யுட்கள் பல தொகுக்கப்பட்ட நூல் தொகை நிலைச் செய்யுளாகும். அது ஒருவரால் உரைக்கப்பட்டுப் பலபாக்களாகவும், பலரால் உரைக்கப்பட்டுப் பலபாக்களாகவும் வரும்.

எடு:- ஒருவரால் உரைக்கப்பட்டது-திருக்குறள்

பலரால் உரைக்கப்பட்டது-நெடுந்தொகை (அகநானூறு) தொகை நிலைச் செய்யுள் பெயர் பெறும் முறை:-

பொருளாற்றொகுத்த பெயர் பெற்றனவும், இடத்தாற் றொகுத்தபெயர் பெற்றனவும், காலத்தாற்றொகுத்த பெயர் பெற்றனவும், தொழிலாற்றொகுத்த பெயர் பெற்றனவும், பாட்டாற் றொகுத்த பெயர் பெற்றனவும், அளவாற்றொகுத்த பெயர் பெற்றனவும் என அறுவகையால் தொகை நிலைச் செய்யுள் பெயர் பெறும்.