உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடு:-

யாப்பு

393

“பொருளாற் றொகுத்தது-புறநானூறு இடத்தாற் றொகுத்தது-களவழி நாற்பது காலத்தாற் றொகுத்தது-கார் நாற்பது

அளவாற் றொகுத்தது-ஐங்குறு நூறு தொழிலாற் றொகுத்தது-ஐந்திணை பாட்டாற் றொகுத்தது-கலித்தொகை.”

தொடர்நிலைச் செய்யுளின் வகை

பொருள் தொடர் நிலைச் செய்யுள், சொற்றொடர் நிலைச் செய்யுள் என தொடர்நிலைச் செய்யுள் இருவகைப்படும். இவற்றுள் ாருள் தொடர் நிலைச் செய்யுளாவது, முற்செய்யுளோடு பிற்செய்யுள் பொருளினால் தொடர்ந்து வரப்பெறும் நூலாம்; ஒரு சரித்திரத்தைக் கூறும் இராமாயணம், சீவகசிந்தாமணி போன்றன இவற்றுள் அடங்கும். சொற் றொடர்நிலைச் செய்யுளாவது, முற்செய்யுளோடு பிற்செய்யுள் சொல்லினால் தொடர்ந்து வரப் பெறும் நூலாம்; அந்தாதியாகப் பாடப்பட்ட நூல்கள் இவற்றுள் அடங்கும். நயனப் பத்து

கண்களைப் புகழ்ந்து பத்துச் செய்யுட்கள் பாடுவது நயனப் பத்து எனப் பெயர் பெறும்.

நல்லாசிரியரிலக்கணம்

ஒழுக்கமுடைய குடிப்பிறப்பும், அருட் கொள்கையுங் கடவுள் நம்பிக்கையும் உயர்ந்த தன்மையும், கலைகளில் தெளிவும், நூற்பொருளை மாணாக்கர்கட்கு எடுத்துக் கூறும் வன்மையும் நிலத்தையும், மலையையும், துலாக்கோலையும், பூவையுமொத்த தன்மையும் உலகியல் அறிவும், உயர்வாகிய

குணங்கள் இவைபோல்வன பிறவும் அமையப் பெற்றவனே நூல்கற்பிக்கும் ஆசிரியனாவான்.

நல்லாசிரியராகாதவரிலக்கணம்:-

நூல் கற்பிக்குந் திறமின்மையும், இழிந்தகுணமும், பிறரது கல்வி செல்வங் குறித்துக் கொள்ளும் பொறாமையும், பேராசையும், மெய்ப் பொருளை மறைத்துப் பொருளைக் காட்டி வஞ்சித்தலும், கேட்போர் அஞ்சுமாறு பேசுதலும், கழற்குடமும், மடற் பனையும் பருத்திக் குண்டிகையும், முடத்தெங்கும் போன்ற