உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைமண்டில ஆசிரியப்பா

யாப்பு

395

ஆசிரியப்பாவிற்குரிய எல்லா இலக்கணமும் பெற்று, எல்லா அடிகளையும் அளவடியாகக் கொண்டு நடக்கும் பா நிலைமண்டில ஆசிரியப்பாவாகும். மூன்றடிமுதல் பலவடி களைக் கொண்டு நடைபெறும். ஈற்றயலடியும் அளவடியாகவே இருக்கும். இப்பா என் என்னும் அசையால் முடிவுறுவது சிறப்புடைத்து.

எடு:-

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரற்

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே."

நூலாசிரியர் மேற்கொள்ள வேண்டிய எழுவகைமதம் (கொள்கை)

பிறர் மதத்திற்கு உடன்படுதலும், பிறர்மதத்தை மறுத்தலும், பிறர் மதத்திற்கு உடன்பட்டுப் பின்பு மறுத்தலும், தானே ஒரு கொள்கையை எடுத்துநாட்டி அதனை வருமிடந்தோறும் நிறுத்துதலும், மாறுபட்ட இரண்டு கொள்கைகளில் ஒன்றை யேற்றலும், பிறர் நூலில் உள்ள குற்றத்தை எடுத்துக் காட்டலும், பிறர்கொள்கைக்கு உடன்படானாகித் தன் கொள்கையையே காள்ளுதலும் ஆகிய ஏழும் நூலாசிரியர் மேற்கொள்ள வேண்டிய கொள்கைகளாகும்.

நூலின் இலக்கணம்

சிறப்பு, பொது ஆகிய இருவகைப் பாயிரங்களையும் பெற்று, மூவகை நூல்களில் ஒன்றாகி, நான்கு பொருளாகிய பயனோடு, எழுவகை மதத்தையும் பின்பற்றி, பத்துவகைக் குற்றத்தையும் நீக்கி பத்துவகை அழகுகளோடு முப்பத்திரண்டு உத்திகளைக் கொண்டு, ஓத்து, படலம், என்னும் உறுப்புக் களோடு சூத்திரமும் காண்டிகையுரையும் விருத்தியுரையுமாகிய வேறுபாட்டு நடைகளைப் பெற்று வருவது நூலாகும்.

நூலின் பாகுபாடு

சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்பன நூலின் பாகு பாடுகளாகும். இவற்றுள் சூத்திரமாவது ஆசிரியன் யாதானும் ஒரு பொருளைக் குறித்துக் கூறுவது; இனமாகிய பொருள்கள் சொல்லப் படுவது ஓத்தாகும்.