உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

இளங்குமரனார் தமிழ்வளம்

4

சூத்திரம் ஓத்து ஆகிய இனங்கள் பலவற்றையும் கூறுவது படலமாகும். சூத்திரம், ஓத்து, படலம் ஆகியவற்றை வுறுப்பாக வுடையது பிண்டமாகும்.

நூலின் பெயர்கள்

நூல்கள் பொருளானும், இடத்தானும், தொழிலானும், உறுப்பானும், அளவானும், செய்தோன் பெயரானும், செய்வித் தோனது பெயராலும் பெயரமையப் பெறும்.

எடு:- பொருள்பற்றி வந்தது ஆசாரக்கோவை; இடம்பற்றி வந்தது மதுரைக் காஞ்சி; காலம்பற்றி வந்தது வேனில் விருத்தம் தொழில் பற்றி வந்தது யானைத் தொழில்; உறுப்புப் பற்றி வந்தது நயனப்பத்து; எல்லைபற்றி வந்தது கேசாதி பாதம்; செய்தோன் பற்றிவந்தது தொல்காப்பியம்; செய்வித்தோன் பெயர் பற்றி வந்தது பாண்டிக்கோவை முதலியன.

நூலின் பொதுவியல்பு

எடுத்துக் கொண்ட பொருளொடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமற் கருதிய பொருளைத் தொகையானும் வகையானுங் காட்டி நின்று விரிந்த வுரையோடு பொருத்தமுடைத்தாகி நுண்ணியதாகி விளக்குவது நூலின் பொது இயல்புகளாகும். நூலின்வகை

முதல்நூல், வழிநூல், சார்புநூல் என நூல் மூன்று வகைப் படும். இயல்பாகவே வினையினின்று நீங்கி விளங்கிய அறிவினை யுடைய அறிவன் உயிர்களுக்காகச் செய்த நூல் முதல் நூலாகும். முதனூலை முழுவது மொத்துச் சிறிது வேறுபட்டிருப்பது வழிநூலாகும். முதனூல் வழிநூல்களுக்குச் சிறுபான்மை யொத்துப் பெரும் பாலும் வேறுபட்டிருப்பது சார்பு நூலாகும்.

நூற்குரியகுற்றங்கள்

குன்றக்கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறு கொளக் கூறல், குற்றமுடைய சொற்களைச் சேர்த்தல், இதற்குப் பொருள் இதுவோ அதுவோ என மயங்க வைத்தல், பொருள் வெளிப்படையாகத் தோன்றச் சொற்களைச் சேர்த்தல், சொல்லத் தொடங்கிய பொருளைவிட்டு இடையிலே மற்றொரு பொருளை விரித்தல், செல்லச் செல்லச் சொன்னடை பொருணடை தேய்ந்து முடிதல், சொற்கள் இருந்தும் ஒரு பயனுமில்லாமற் போதல் ஆகிய பத்தும் நூற்குரிய குற்றங்களாகும்.