உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

நூற்குரிய பத்துவகை அழகு

397

சுருங்கச் சொல்லுதல், விளங்கவைத்தல், படிப்பவருக்கு ன்பத்தைத் தருதல், நல்ல சொற்களைச் சேர்த்தல், சந்தவின்ப முடைத்தாதல், ஆழ்ந்த கருத்தையுடைத்தாதல், படலம், ஓத்து முதலியவைகளைக் காரணகாரிய முறைப்படி வைத்தல், உயர்ந் தோர் வழக்கத்தோடு மாறுகொள்ளாமை, சிறப்பான பொருளைத் தருதல், விளங்கிய எடுத்துக் காட்டுகளையுடைத்தாதல் ஆகிய பத்தும் நூற்குரிய அழகுகளாகும்.

நூற்குரிய முப்பத்திரண்டு உத்திகள்

நுதலிப் புகுதல், ஓத்துமுறை வைப்பு, தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல், முடித்துக் காட்டல், முடிவிடங்கூறல், தானெடுத்து மொழிதல், பிறன்கோட் கூறல், சொற்பொருள் விரித்தல், தொடர்ச் சொற்புணர்த்தல், இரட்டுறமொழிதல், ஏதுவின் முடித்தல், ஒப்பின் முடித்தல், மாட்டெறிந் தொழுகல், இறந்தது விலக்கல், எதிரதுபோற்றல், முன்மொழிந்தது கோடல், பின்னது நிறுத்தல், விகற்பத்தின் முடித்தல், முடிந்தது முடித்தல், உரைத்துமென்றல், உரைத்தாமென்றல், ஒருதலை துணிதல், எடுத்துக்காட்டல், எடுத்தமொழியினெய்த வைத்தல், இன்ன தல்ல திதுவெனமொழிதல், எஞ்சிய சொல்லினெய்தக்கூறல், பிறநூன் முடிந்ததுதானுடன்படுதல், தன்குறி வழக்கம் மிகவெடுத் துரைத்தல், சொல்லின் முடிவினப் பொருள் முடித்தல், ஒன்றின முடித்தல், தன்னின முடித்தல், உய்த்துணரவைத்தல் என்பன முப்பத்திரண்டு தந்திர வுத்திகளாகும்.

நூற்றந்தாதி

நூறு வெண்பாவிலேனும் நூறு கலித்துறையிலேனும் அந் தாதித் தொடையிற் கூறுவது நூற்றந்தாதியாகும். இந்நாளில் அந்தாதியெனப் பொதுவாக வழங்கப் பெறும் இதனை முப்பது பாக்களாற் பாடுவது முண்டு.

நூற்பாவகவல்

விழுமியபொருளைத் தழுவிய சூத்திர யாப் பினவாய் வருவன நூற்பா வகவலாகும்.

நெடிலடி

ஐந்து சீர்களைக் கொண்டது நெடிலடியாகும். இவ்வடி கலிநிலைத்துறை, கட்டளைக் கலித்துறை முதலிய பாக்களுக்கு உரியது. பதினைந்து எழுத்தான் அமைவதும். பதினாறு பதினேழு எழுத்தான் அமைவதும் நெடிலடி என்பர் தொல்காப்பியர்.