உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

எடு:-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“வென்றான் வினையின் தொகையாக விரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும் சென்றான் திகழுஞ் சுடர்சூ ழொளிமூர்த்தி யாகி நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்.

நேரிசை ஆசிரியப்பா

ஆசிரியப் பாவிற்குரிய அகவலோசையைத் தரும் ஆசிரியத் தளைகளைப் பெற்று, ஈற்றயல்அடி சிந்தடியாகவும், ஏனையடிகள் அளவடிகளாகவும், அமைய ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், ஐ என்ற அசைகளில் ஒன்றை இறுதியில் பெற்று வருவது நேரிசை ஆசிரியப் பாவாகும். இப்பாவில் வேற்றுத்தளைகள்

ரண்டொன்று விரவியும் வரலாம்.

எடு:-

“நிலத்தினும்பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற்

கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே”

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

முன் ஒரு தரவு வந்து, அதன் பின்பு மூன்று தாழிசை வந்து, அதன்பின்பு ஒரு தனிச் சொல்வந்து அதன்பின்பு ஆசிரியத் தானாவது வெண்பாவானாவது ஒரு சுரிதகம் பெற்று வருவது நேரிசை யொத்தாழிசைக் கலிப்பாவாகும். தரவு, தாழிசை, தனிச் சொல் சுரிதகம் என்னும் நான்குறுப்பிற் கூறப்பட்டமையாலும், உடன்பட்ட ஒலியுடைமையாலும், நுண்பொருள் படக்கூறப் படுதலாலும், மிக்க புகழையுடையதாதலாலும் இப்பாவிற்கு நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா எனப் பெயர் வந்ததென்று கூறுவாருளர்.

நேரிசைச் சிந்தியல் வெண்பா

சிந்தியல் வெண்பாவிற்குரிய இலக்கணத்தைப் பெற்று இரண்டாம் அடியின் தனிச்சொல் ஒரூஉ எதுகை பெற்று அமைய ஒரு விகற்பத்தாலேனும் இரு விகற்பத்தாலேனும் வரும் மூன்றடிவெண்பா நேரிசைச் சிந்தியல் வெண்பாவாகும். இப்பா T பல விகற்பத்தால் வருதல் கூடாது.