உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

399

எடு:-

66

“நல்லா ருறவால் நலம்பெருகுந் நாடோறும் அல்லா ருறவா லறந்தேயும்-பொல்லார் தொடர்விடுதல் மேலாந் துணை

நேரிசை வெண்பா

99

ஈற்றடி சிந்தடியாய் ஏனையடி அளவடியாய் அமைய, இயற்சீரும் காய்ச்சீர்களும், இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவிவர இரண்டாம் அடியின் ஈற்றில் ஒரூஉ எதுகை உடையதாய், ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய் பாடுகளுள் ஒன்றினை ஏற்று ஒரு விகற்பத் தாலேனும் இருவிகற்பத்தாலேனும் வரும் நாலடிச் செய்யுள் நேரிசை வெண்பாவாகும். இதன் ஓசை வன்மை பொருந்தியதாக விருக்கும். இரண்டாவது அடி தனிச் சொல் பெற்றிருப்பினும் அது பல விகற்பமாய்வரின் நேரிசை வெண்பா ஆகாது. விகற்ப மாவது, வெண்பாவின் நான்கடிகளும் ஒரே வகையான எதுகை பெற்றிருப்பின் ஒருவிகற்பம். முதலிரண்டடிகள் ஒருவித எதுகையும் பின்னிரண்டடிகள் எதுகையும் பெற்றிருப்பின் இருவிகற்பாம்.

எடு:-

வேறுவித

“மன்னன் விடுத்த வடிவிற் றிகழ்கின்ற

அன்னம்போய்க் கன்னி யருகணை-நன்னுதலும் தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை என்னாடல் சொல்லென்றா ளீங்கு.

நேர் அசை

குறில் தனித்துவரினும், ஒற்றொடுவரினும், நெடில் தனித்து வரினும், ஒற்றொடுவரினும் நேர் அசையாகும்.

எடு:- “உள் ளார் தோ ழி” என நேரசை நான்கும் வந்தவாறு

காண்க.

நேர்புஅசை

நேரசையோடு சேர்ந்து வருகிற குற்றியலுகரமும், அதனோடு சேர்ந்து வருகிற முற்றியலுகரமும் நேர்பு அசையாகும்

எடு:- காது, கன்று, காற்று, காது, சார்பு, கல்லு.