உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

நொச்சிமாலை

இளங்குமரனார் தமிழ்வளம்

4

புறத்திலே யூன்றிய பகைவர் கோடலன்றி நொச்சிப் பூமாலை சூடித் தன் மதிலைக் காக்குந் திறத்தைக் கூறுவது நொச்சிப் பூ மாலையாகும்.

பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா

தரவு, மூன்றிற்கு அதிகமான தாழிசைகள், தனிச் சொல், சுரிதகம் ஆகியவற்றைப் பெற்றுவருவது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவாகும்.

பஃறொடை வெண்பா

வெண்பாவிற்குரிய எல்லா இலக்கணங்களையும் பெற்றுப் பல விகற்பமுடையதாய் நான்கின் மிக்க பல வடிகளால் வருவது பஃறொடை வெண்பாவாகும்.

எடு:-

66

வையக மெல்லாங் கழனியா வையகத்துட்

செய்யகமே நாற்றிசையின் றேயங்கள் செய்யகத்துள் வான்கரும்பே தொண்டை வளநாடு வான்கரும்பின்

சாறேயந்நாட்டிற் றலையூர்கள் சாறட்ட

கட்டியே கச்சிப் புறமெல்லாம் கட்டியுட்

டானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்றான் கச்சி யகம்.

இஃது ஏழடிப் பலவிகற்பப் பஃறொடை வெண்பா. பஃறொடை வெண்பாவின் வகை

பஃறொடை வெண்பா, நேரிசைப் பஃறொடை வெண்பா, இன்னிசைப் பஃறொடை வெண்பா, என இருவகைப்படும். இரண்டடி ஓரெதுகையும், இரண்டடிக் கொருமுறை ஒரூஉ எதுகையுடைய தனிச் சொல் பெற்றும்; நான்கிற்கு அதிகமான அடிகளைக் கொண்டு நடப்பது நேரிசையையுடைய பஃறொடை வெண்பாவாகும். அடிதோறும் தனிச் சொல் பெற்றும், பெறா மலும், அல்லது சிலவடிகளில் மாத்திரம் தனிச் சொல் பெற்றும், பலவிகற்பங்களையுடைய பலவடிகளால் நடப்பது இன்னிசைப்

பஃறொடை வெண்பாவாகும்.

பதிகம்

ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுள் பாடுவது பதிகமாகும்.