உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

413

விரவிவரின் பிரிந்திசைத் தூங்கலோசையைப் பெறும். இப்பா மூன்றடியைச் சிற்றெல்லையாகவும் அதற்கு மேற்பட்ட பலவடி களைப் பேரெல்லையாகவுங் கொண்டு அமையும்.

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

அம்போதரங்க உறுப்பிற்குந் தாழிசைக்கும் நடுவே அராக உறுப்புப் பெற்றுத் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம் என்னும் ஆறுறுப்பால் நடைபெறுவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவாகும். விண்ணோர் உயர்வையும் அரசரது பெருமைகளையும் வண்ணித்துக் கூறுதலாலும், வேறொரு வண்ணத்தால் சொல்லப் பட்ட முடுகியலடி யுடைத் தாகலானும் இப்பாவிற்கு வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்று பெயர்வந்தது

வரலாற்று வஞ்சி

குல முறை பிறப்பு முதலிய மேம்பாட்டின் பல சிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப் பாவாற் கூறுவது வரலாற்று வஞ்சி யென்று வழங்கப் பெறும்.

வருக்கக் கோவை

அகர முதலிய எழுத்து வருக்கம் ஒவ்வொரு செய்யுளிலும் அகர முறைப்படி அமையப் பாடுவது வருக்கக் கோவையாகும்.

வருக்கமாலை

மொழிக்கு முதலாகும் வருக்க வெழுத்தினுக்கு ஒவ்வொரு செய்யுள் பாடுவது வருக்கமாலையாகும்.

வளமடல்

அறம், பொருள், இன்பமாகிய பயனை யிழந்து, மங்கையர் காம வின்பத்தைப் பயனெனக் கொண்டு, பாட்டுடைத் தலை மகன் இயற்பெயருக்குத் தக்கதை எதுகையாக நாட்டிக் கூறி, அவ் வெதுகைப் படத் தனிச் சொல்லில்லாமல் இன்னிசைக் தலைமகன் இரந்து குறைபெறாது மடலேறுவதாய் ஈரடி யெதுகையாக வரப்பாடுவது வளமடல் என்னும் நூலாகும்.

கலிவெண்பாவால்

வாகைமாலை

பகை வரை வென்று புகழ் படைத்து வாகைப் பூமாலை சூடுவதை யாசிரியப் பாவாற் கூறுவது வாகைமாலையாகும்.