உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

இளங்குமரனார் தமிழ்வளம்

மல்லல்வான் மழைமுழங்கின

4

செல்வர்தேர் வரவுகாண்குமே”

இஃது ஒரு பொருண்மே லொன்றாய் அடிமறியாய் வந்த வஞ்சி மண்டிலத்துறை.

வஞ்சிவிருத்தம்

முச்சீரடி நான்காய் வருவது வஞ்சி விருத்தமாகும்.

இனி முச்சீரடி நான்காய் அடிமறியாகாதே வருவனவற்றை வஞ்சி நிலை விருத்தம் என்றும், அடிமறியாய் வருவனவற்றை வஞ்சி மண்டில விருத்த மென்றுங் கூறுவர்.

எ.டு:-

“கள்ள மாய வாழ்வெலாம் விள்ள ஞானம் வீசுதாள்

வள்ளல் வாழி கேளனோ வுள்ள வாறு ணர்த்தினான்.

""

“சொல்வ லோம்புமின் றோநனி செல்ல லோம்புமின் றீநெறி கல்ல லோம்புமின் கைதவம்

மல்லன் ஞாலத்து மாந்தர்காள்

இஃது அடிமறியாய் வந்தமையால் வஞ்சி மண்டில விருத்த மாயிற்று.

வஞ்சிப்பாவின் இலக்கணம்

ஒன்றிய வஞ்சித்தளை ஒன்றா வஞ்சித்தளை ஆகிய தளை களைப் பெற்று, வேற்றுத் தளைகளும் விரவி வர, தேமாங்கனி, முதலிய நால்வகைக் கனிச்சீர்களோடு நிரையசையை இறுதியிலே யுடைய நாலசைச் சீர்களும் அமைய, குறளடி, சிந்தடி ஆகிய இருவகை அடிகளையும் உடையதாய், தனிச் சொல் பெற்று ஏந்திசைத் தூங்கல், அகவற்றூங்கல், பிரிந்திசைத் தூங்கல் ஆகிய ஓசைகளுள் ஒன்றைப் பெற்று, ஆசிரியச் சுரிதகத்தால் முடிவது வஞ்சிப்பாவாகும். இப்பா குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என இருவகைப்படும். ஒன்றிய வஞ்சித் தளையால் அமையும் வஞ்சிப்பா ஏந்திசைத் தூங்கலோசையைப் பெறும். ஒன்றாத வஞ்சித்தளையால் அமையும்பா அகவற்றூங்கலோசையைப்

பெறும். இருவகைத் தளைகளோடும் பிறதளைகளும்