உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சித்தாழிசை

யாப்பு

411

இருசீரடி நான்காய் மூன்று செய்யுள் ஒருபொருள் மேல் அடுக்கிவருவன வஞ்சித்தாழிசையாகும். இனி, இரு சீரடி நான்காய் மூன்று செய்யுள் ஒரு பொருண்மேல் அடிமறியாய் வருவனவற்றை வஞ்சி மண்டிலத்தாழிசை என்றுங் கூறுவர்.

எ.டு:-

"இரும்பிடியை யிகல்வேழம்

பெருங்கையால் வெயின் மறைக்கும்

அருஞ்சுர மிறந்தார்க்கே

விரும்புமென் மனனேகாண்;

மடப்பிடியை மதவேழந்

தடக் கையால் வெயின் மறைக்கும்

இடைச்சுர மிறந்தார்க்கே

நடக்குமென் மனனே காண்;

பேடையை யிரும்போத்துத் தோகையால் வெயின்மறைக்கும்

காடக மிறந்தார்க்கே

யோடுமென் மனனே காண்

99

வை ஒரு பொருண்மேல் மூன்று அடுக்கி வந்த வஞ்சி நிலைத்தாழிசை.

வஞ்சித்துறை

இருசீர் அடி நான்காய் ஒரு பொருண்மேல் தனித்து வருவது வஞ்சித் துறையாகும். இனிசீர் அடி நான்காய் ஒரு பொருண்மேல் தனித்து அடிமறியாய் வருவனவற்றை வஞ்சி மண்டிலத்துறை என்றுங் கூறுவர்.

எ.டு:-

66

'மைசிறந்தன மணிவரை

கைசிறந்தன காந்தளும்

பொய்சிறந்தன காதலர் மெய்சிறந்திலர் விளங்கிழாய்”

இஃது வஞ்சித்துறை.

“முல்லைவாய் முறுவலித்தன கொல்லைவாய்க் குருந்தீன்றன