உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

இளங்குமரனார் தமிழ்வளம்

4

மேற்கதுவாய் இயைபு

அளவடியின் நான்காம் சீர், இரண்டாம் சீர், முதல்சீர் களில் உள்ள சொல்லோ எழுத்தோ ஒன்றி வருதல் மேற்கதுவாய் இயைபு.

எ.டு:- “வல்லே நுதலே வேற்கண் கயலே.

மேற்கதுவாய் எதுகை

அளவடியின் முதல்சீர், மூன்றாஞ்சீர், நான்காம்சீர் ஆகிய சீர்களிலுள்ள இரண்டாம் எழுத்து ஒன்றிவருதல் மேற்கதுவாய் எதுகை.

எ.டு:- “என்னையு மிடுக்கண் துன்னுவித் தின்னடை” மேற்கதுவாய் மோனை

அளவடியின் முதல் சீர், மூன்றாம் சீர், நான்காம் சீர் ஆகிய சீர்களில் முதலெழுத்து ஒன்றிவருதல் மேற்கதுவாய் மோனை யாகும்.

எ.டு:- “அரும்பிய கொங்கை யவ்வளை யமைத்தோள்.” மேற்கதுவாய் முரண்

அளவடியின் இரண்டாம் சீரில் உள்ள சொல்லைத் தவிர, மற்றைச் சீர்களில் உள்ள சொற்கள் முரணி நிற்றல் மேற்கதுவாய் முரண்.

எ.டு:- “வெள்வளைத் தோளுஞ் சேயரிக் கருங்கணும்." வசந்தமாலை

தென்றலை வருணித்துப் பாடுவது வசந்த மாலையாகும்.

வஞ்சித்தளை

நிரையசையை இறுதியிலுடைய மூவகைச்சீர் கனிச் சீராகும். இச்சீர் வஞ்சிப் பாவிற்குரியது. இச்சீரை வஞ்சியுரிச்சீர் என்றும், கனிச்சீர் என்றுங் கூறுவர். இக்கனிச்சீர் நிலைச்சீராயின் வருஞ்சீர் முதல் எதுவாயினும் வஞ்சித்தளை அமைந்துவிடும். அஃதாவது கனிமுன் நேர்வந்தால் நேரொன்றிய வஞ்சித்தளை கனிமுன் நிரை வந்தால் நிரையொன்றிய வஞ்சித்தளையாகும்.

எ.டு:- மழை முகிலென குழல்விரிதரு கனிமுன் நிரை. நிரையொன்றிய வஞ்சித்தளை.

கலைவீழ்தரு நன்மடவார் - கனிமுன்நேர். நிரை ஒன்றா வஞ்சித்தளை.