உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்று இயைபு

அளவடியின்

யாப்பு

409

சீர்களிலும் இறுதி எழுத்து

எல்லாச் சீர்களிலும் ஒன்றிவரத் தொடுப்பது முற்று இயைபாகும்.

எடு:- "புயலே குழலே மயிலே யியலே”

முற்று எதுகை

அளவடியின் எல்லாச்சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது முற்று எதுகையாகும்.

எ.டு:- “கன்னியம் புன்னை யின்நிழல் துன்னிய’

முற்றுமுரண்

அளவடியின் எல்லாச் சீர்களும் சொல்லும் பொருளும் முரண்படத் தொடுப்பது முற்று முரண் தொடையாகும்.

எ.டு:- “துவர்வாய்த் தீஞ்சொலு முவந்தெனை முனியாது.” முற்றுமோனை

அளவடியின் சீர் தோறும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது முற்றுமோனையாகும்.

எடு:- "அயில்வே லனுக்கிய யம்பலைத் தமர்ந்த." மெய்க்கீர்த்திமாலை

சொற்சீரடி யென்னுங் கட்டுரைச் செய்யுளால் குலமுறையிற் செய்த சீரிய நிகழ்ச்சிகளைக் கூறுவது மெய்க்கீர்த்தி மாலையாகும். மும்மணிக் கோவை

ஆசிரியப் பாவும், வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் முறை முறையே மாறி மாறி வர அந்தாதித் தொடையமைய முப்பது பாடல்கள் பாடுவது மும்மணிக் கோவையாகும்.

மும்மணிமாலை

வெண்பாவுங் கலித்துறையும் அகவலும் அந்தாதியாக முப்பது பாடுவது மும்மணிமாலையாகும்.

மேற்கதுவாய் அளபெடை

அளவடியின் இரண்டாம் சீர் தவிர மற்ற சீர்களில் எழுத்து அளபெடுத்தல் மேற்கதுவாய் அளபெடையாம்.

எ.டு:- “தேஎம் புனலிடைச் சோஓர் பாஅல்.”