உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

இளங்குமரனார் தமிழ்வளம்

4

மருள்=மயக்கம், ஒருபாவகையுடன் மற்றொரு பாவகை

சேர்தல்.

மாணாக்கர் இலக்கணம்

ஆசிரியன் தன் மகனுக்கும், தன்னாசிரியன் மகனுக்கும். அரசன் மகனுக்கும், பொருளை மிகுதியாகக் கொடுப்பவனுக்கும், வழிபாடு செய்வோனுக்கும் தன்னாற் கற்பிக்கப்பட்ட உரையை விரைவில் கற்கும் அறிவுடையோனுக்கும் நூல் கற்பித்தல் முறை யாகும் என்பது நன்னூல்.

மாணாக்கராகாதவரிலக் கணம்

கள்ளுண்டு களிப்பவன், சோம்பேறி, மானமுடையோன், காமமுடையவன், திருடன், நோயாளி, அறிவில்லாதவன், பிணக் கன், கோபமுடையவன், மிகுதியாகத் தூங்குவோன், அறிவுக் கூர்மை இல்லாதவன், பழைய நூல்களைக் கண்டு அஞ்சுபவன், அஞ்சத்தக்கவைகளைக் கண்டு அஞ்சாதவன், பாவஞ் செய்வோன், பொய்பேசுவோன் ஆகியவர்கட்கு ஆசிரியர் நூலைக் கற்பிக்க மாட்டார். இதுவும் நன்னூல் சரக்கே.

மாணாக்கர் பாடங் கேட்கும் முறை

பாடங்கேட்கும் மாணவன் பள்ளிக்குக் குறித்த காலத்தில் செல்லுதல் வேண்டும். ஆசிரியனை வழிபடுதல் வேண்டும். ஆசிரியன் குணத்தையறிந்து, அவன் குறிப்பின் வழியே சென்று அவன் ‘அமர்க' என்று கூறிய பின்பு அமர்ந்து படியென்று கூறிய பிறகு படித்தல் வேண்டும். பசித்துண்பவனுக்கு உணவிடத்துள்ள அவாப் போலப் பாடங்கேட்டலிற் ஆசையுடையனாகிச் சித்திரப் பாவைபோல அவ்வசைவறு குணத்தினோடு அடங்கிக் காதானது வாயாகவும் மனமானது கொள்ளுமிடமாகவும் முன் கேட்கப் பட்டவற்றை மீண்டுங் கேட்டு அப்பொருள்களை மறந்து விடாது உள்ளத்தின் கண் நிறைத்துக் கொண்டு ஆசிரியரிடம் விடை பெற்றுச் செல்லுதல் வேண்டும்.

முதுகாஞ்சி

இளமை கழிந்து அறிவு மிகுந்தவர்கள், இளமை கழியாத வர்களும் அறிவு நிரம்பப் பெறாதவர்களுமாகிய சிறுவர்கட்கு அறிவு கூறுங் கூற்றாகப் பாடுவது முதுகாஞ்சியாகும்.

முற்று அளபெடை

அளவடியின் எல்லாச்சீர்களும் அளபெடுத்து நிற்குமாறு தொடுப்பது முற்று அளபெடையாகும்.

66

எ.டு:- “ஆஅ னாஅ நீஇ a