உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

407

உ ஊ, எ எ, ஏ, ஐ, நை, நை, மை என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்க்குத் தேர் என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும். மேற்கூறிய மங்கலச் சொற்களின் வேறு பெயர்கள் வரினும் குற்றமன்று. (கணியமாம் சோதிடம் புகுந்து விளையாடிய போலி விளையாட்டின் விளைவுகள் இன்னவை.)

மங்கலப் பொருத்தம்

திரு, யானை, தேர், பரி, கடல், மலை, மணி, பூ, புகழ், சீர், மதி, நீர், எழுத்து, பொன், ஆரணம், சொல், புயல், நிலம், கங்கை, உலகம், பரிதி, அமிழ்தம் இவைகளும் இவைகளின் பொருள் தரும் பிற பொருள்களும் மங்கலச் சொற்களாக வருதலுக்கு ஏற்றனவாம்.

மங்கலவெள்ளை

உயர்குலத்தில் பிறந்த இளம் பெண்ணை வெண்பா ஒன்ப தாலும் வகுப்பு ஒன்பதாலும் பாடுவது மங்கல வெள்ளையாகும். மதுரகவி

தொடையுந் தொடைவிகற்பமுஞ் செறியச் சொற்சுவையும் பொருட்சுவையும் விளங்க உருவக அணி முதலிய அணிகளோடு னிமை துதையச் செய்யுளியற்றுவோன் மதுரகவி என்று பெயர் பெறுவான். (இன்பாவலர்)

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

கலியுறுப்பில் மிக்கும், குறைந்தும், பிறழ்ந்தும், உறழ்ந்தும், மயங்கியும், கலியுள் வாரா என்ற நேரீற்று இயற்சீரும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும், ஐஞ்சீர் அடியும் வந்து, ஒத்தாழிசைக் கலிப்பாக்களோடு ஒவ்வாது வருவனவெல்லாம் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவாகும்.

மருட்பா

அவ்விரண்டடியுள்ளும்

புறநிலை வாழ்த்து, கைக்கிளை, வாயுறை வாழ்த்து, செவி யறிவுறூஉ என்னும் நான்கு பொருள் மேலும் வெண்பா முதலாக ஆசிரியப்பா ஈறாக வருவன மருட்பாவாம். அவற்றுள், கைக்கிளை மருட்பாவின் ஈற்றில் வரும் ஆசிரியம் இரண்டே யடியினதாய் ஈற்றயலடி முச்சீரதாய் வரும். மருட்பாவில் வெண்பாவடியும் ஆசிரியவடியும் அளவொத்து நடப்பது சம நிலை மருட்பாவாகும். வெண்பாவடி மிகுந்து ஆசிரியவடி குறைந்து வருவனவும், ஆசிரியவடி மிகுந்து வெண்பாவடி குறைந்து வருவனவும் வியனிலை மருட்பாகும்.