உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

இளங்குமரனார் தமிழ்வளம்

4

நு, நூ, யூ என்னும் பெயர்களுக்கு எழுத்து என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.

கு, கூ, சௌ, து, தூ, தெ, தே, நெ, நே, பு, பூ, மெ, மே, மொ, மோ, மௌ என்னும் பெயர்களுக்குப் பொன் என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.

கௌ, சை, ம, மா, மி, மீ, மு, மூ வை வௌ என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்டு தொடங்கும் பெயர்கட்குப் பூ என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.

கொ, கோ என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களுக்குத் திரு என்பதை யேனும் திங்கள் என்பதை யேனும் மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.

கெ, கே என்னும் எழுத்துக்களை முதலாக வுடைய பெயர் கட்கு மணி என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.

கை, சி, சீ, தீ, தை, நொ, நோ, பை என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களுக்கு நீர் என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.

ஒள, சு, சூ, செ, சே, தௌ என்னும் எழுத்துக்களை, முதலாகக் கொண்டு வரும் பெயர்களுக்குச் சொல் என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.

அ, ஆ, ஒ, ஓ, த, தா, தொ, தோ, யோ என்னும் எழுத்துக் களை முதலாகக் கொண்ட பெயர்கட்குக் கங்கையென்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.

ஞெ, ஞா என்ற எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்கட்கு வாரணம் என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.

இ, ஈ, ஞா என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்கட்குக் குஞ்சரம் என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.

ப, பா என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்கட்கு உலகம் என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.

ச, சா, பெ, பே, பொ, போ, வெ, வே என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்கட்குப் பார் என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.