உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

405

வரலாறு, அம்மாணாக்கன் பாடங்கேட்கும் வரலாறு ஆகிய ஐந்தையுங் கூறுவது பொதுப் பாயிரமாகும்.

பொழிப்பு அளபெடை

அடியின் முதல்சீர் மூன்றாம் சீர் ஆகிய இருசீர்களிலுள்ள எழுத்து அளபெடுத்து நிற்பது பொழிப்பு அளபெடையாகும். எடு:- “பூஉக் குவளைப் போஓ தருந்திக்.’

பொழிப்பு இயைபு

அளவடியின் நான்காம்சீர் இரண்டாம்சீர் ஆகிய சீர்களின் ஈற்றெழுத்து அல்லது சொல் ஒன்றி நிற்றல் பொழிப்பு இயைபாகும். எடு:- “மற்றத னயலே முத்துறழ் மணலே."

பொழிப்பு எதுகை

செய்யுளின் முதல்சீரின் இரண்டாவது எழுத்தும் மூன்றாம் சீரின் இரண்டாவது எழுத்தும் ஒன்றி வரத் தொடுப்பது பொழிப்பு எதுகையாகும்.

எடு:- “பன்னருங் கோங்கி னன்னலங் கவற்றி.”

பொழிப்புமுரண்

அளவடியின் முதல்சீர் மூன்றாம் சீர் ஆகிய இருசீர்களின் சொற்கள் முரணி நிற்குமாறு தொடுப்பது பொழிப்பு முரணாகும். எ.க:- “சுருங்கிய நுசுப்பிற் பெருகுவடந் தாங்கி”

பொழிப்புமோனை

அளவடியின் முதல் சீர் மூன்றாம் சீர் ஆகிய இருசீர்களிலும் மோனை அமையத் தொடுப்பது பொழிப்பு மோனையாகும். எ.டு:- “அரிக்குரற் கிண்கிணி யரற்றுஞ் சீறடி"

போர்க் கெழுவஞ்சி

பகைவர் மேல் போர் குறித்துச் செல்லுகின்ற வெற்றி வேந்தர்கள் வஞ்சிப் பூமாலை சூடப் புறப்படும் படையெழுச்சிச் சிறப்பை ஆசிரியப் பாவாற் கூறுவது போர்க்கெழுவஞ்சியாகும். மங்கலச் சொற்கள்

க, கா, கி, கீ, சொ, சோ, ந, நா, நி, நீ, யா, வ, வா, வி, வீ என்னும் எழுத்துக்களை முதலாகவுடைய பெயர்களுக்குச் சீர் என்பதை மங்கலச் சொல்லாக எடுக்க வேண்டும்.