உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

பெருமங்கலம்

இளங்குமரனார் தமிழ்வளம்

4

நாள்தோறுந் தான் மேற்கொள்ளுகின்ற சிறை செய்தல் முதலிய செற்றங்களைக் கை விட்டுச் சிறைவிடுதல் முதலிய சிறந்த தொழில்கள் பிறந்ததற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணியைக் கூறுவது.

பொதுச்சீர்

நான்கு அசைகளால் ஆவது பொதுச்சீராகும். இச்சீரைப் புலவர்கள் அதிகம் கையாள்வது இல்லை. இச்சீர் தேமாந் தண்ணிழல், புளிமாந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல், கூவிளந் தண்ணிழல், தேமா நறுநிழல், புளிமா நறுநிழல், கருவிள நறுநிழல், கூவிள நறுநிழல், தேமாந்தண்பூ, புளிமாந்தண்பூ, கருவிளந் தண்பூ, கூவிளந்தண்பூ, தேமா நறும்பூ, புளிமா நறும்பூ, கருவிள நறும்பூ, கூவிள நறும்பூ என்ற வாய்பாடுகளால் அழைக்கப் பெறும். இச்சீர் பதினாறனுள் நேரசையை இறுதியிலுடைய பொதுச்சீர் எட்டும் வெண்பாவிற்குரிய காய்ச்சீர் போலக் கொண்டு வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்டளை யாகவும், ஒன்றாதது கலித்தளையாகவுங் கொள்ளப்படும். நிரையசையை இறுதியில் பெற்ற பொதுச்சீர் எட்டும் வஞ்சிச்சீர் போலக் கொண்டு வருஞ்சீர் முதலசையோடு ஒன்றினும் ஒன்றாவிடினும் வஞ்சித்தளை என்று கொள்ளப்படும்.

எடு:-

“பைம்பொற் குன்றே பணையிளவன முலை

அம்புத்துணையே யரிமதருண்கண்

குனிசிலையிரண்டே கொடுநன்புருவம்

பானிறமதியே பழிதீர் நன்முகம்

கொடியேதளிரிடை கொண்மூவேகுழல்

ஆடரவின்பட மாமேகடிதடம்

காந்தளந்துணைமல ரவையேகையும்

பூந்தளிரன்றே புடைபெயர்மெல்லடி

நண்பா

படர்புகழ் மாறன் பராங்குசன்

துடரிவண் பொழிலே தோகைய திடனே."

பொதுப் பாயிரத்தின் இலக்கணம்

நூலினது வரலாறு, ஆசிரியனது வரலாறு. அவ்வாசிரியன் மாணாக்கனுக்கு நூலைச் சொல்லும் வரலாறு. மாணாக்கன்