உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநிலை

யாப்பு

403

நீ வணங்குந் தெய்வம் நின்னைப் பாதுகாப்ப நின்வழி சிறந்தோங்குவதாக எனப்பாடுவது புறநிலையாகும்.

புறநிலை வாழ்த்து

வழிபடு தெய்வம் நின்னைக் காக்கக் குற்றமில்லாத செல்வத்தோடு காலைக் கொருகால் சிறந்து வாழ்வாயாகவென்று மருட்பாவாற்பாடுவது.

புறப்பாவகவல்

ஒரு

பாடாண்துறைமேல் பாடப்படும் ஆசிரியப் பாவெல்லாம் புறப்பா வகவலாகும்.

பெயரின்னிசை

பாட்டுடைத் தலைவன் பெயரைப் பொருந்த இன்னிசை வெண்பாவால் தொண்ணூறேனும் எழுபதேனும் ஐம்பதேனும் பாடுவது.

பெயர் நேரிசை

பாட்டுடைத் தலைவன் பெயரைப் பொருந்த நேரிசை வெண்பாவால் தொண்ணூறேனும், எழுபதேனும்,ஐம்பதேனும், பாடுவது பெயர் நேரிசையெனப் பெயர் பெறும்

பெருங்காப்பியம்

தெய்வ வணக்கமும், செயப்படுபொருளும், வாழ்த்தும் முன்னுடைத் தாய், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் பயனுடையதாய்ப், பாட்டுடைத் தலைவனைக் கொண்டதாய், மலை, கடல், நாடு, நகர், பருவம் முதலியவற்றின் வளங் கூறுதலும், மணமுடித்தல், முடிகவித்தல், பொழில் விளையாட்டு, நீர்விளையாட்டு, உண்டாட்டு, புலவி, கலவி என்றிவற்றைப் புகழ்தலும், மந்திரம், தூது, செலவு, போர் வென்றி என்பவற்றைக் கூறலுமாகிய இவை, தொடர் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பகுதிகளையுடையதாய் இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும்.

பெருமகிழ்ச்சிமாலை

பெண்களுடைய அழகு, குணம், ஆக்கம், சிறப்பு, முதலியவைகளைக் கூறுவது பெரு மகிழ்ச்சியாகும்.