உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

417

ஐந்தடியாயினும், ஆறு அடியாயினும் வந்து ஈற்றயல் அடியும், ஈற்றயல் அடிகளும் ஒரு சீரோ, பல சீர்களோ குறைந்தும், அளவடி, நெடிலடி, கழிநெடிலடிகளாலும் அமைந்து நடப்பது வெண்டுறையின் இலக்கணம். இதன் எல்லாவடிகளும் ஒத்த ஓசையுடன் வரின் ஓரொலி வெண்டுறை என்றும், முன்னர்ச் சிலவடிகள் ஓரோசையுடனும், பின்னர்ச் சிலவடிகள் வேறு ஓசையுடனும் நடக்குமாயின் வேற்றொலி வெண்டுறை என்றும் வழங்குவர். இச் செய்யுள் மூன்றடிகளை உடையதாயின் சிந்தியல் வெண்பாவிற்கும், நான்கடிகளை உடையதாயின் நேரிசை இன்னிசை வெண்பாக்களுக்கும், ஐந்தடி முதல் ஏழடிவரை உடையதாயின் பஃறொடை வெண்பாவிற்கும் வண்பாவிற்கும் இனமாகக் கொள்வர்.

எ.டு:-

66

'தாளாள ரல்லாதார் தாம்பல ராயக்கா லென்னா மென்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்

பீலிபோற் சாய்ந்துவிழும் பிளிற்றியாங் கேபோலும்.”

வெளிவிருத்தம்

மூன்று அல்லது நான்கு அடிகளைக் கொண்டு ஒவ்வோர் அடியின் ஈற்றிலும் ஒரு சொல்லையே தனிச் சொல்லாகப் பெற்று, எல்லாச் சீர்களும் எல்லாத் தளைகளும் விரவி வர, பாவின் அடியளவும் சீரின் தன்மையும் ஒத்ததாய் அமைய, நான்கு அடிகளும் ஓரெதுகை அமைந்து நடப்பதும், முதலிரண்டு அடிகளும் ஓரெதுகையாகவும், பின்னிரண்டு அடிகளும் ஓரெதுகை யாகவும் அமைந்து நடப்பதும் வெளிவிருத்தமாகும். பாவின் அடியளவு ஒத்து நடத்தலாவது-பாவின் முதலடி சிந்தடியாயின் மற்றைய அடி சிந்தடியாகவும், அளவடியாயின் அளவடியாகவும், நெடிலடியாயின் நெடிலடியாகவும், கழி நெடிலடியாயின் கழி நெடிலடியாகவும் அமைவதாம். சீரின் தன்மை ஒத்தலாவது- முதலடியில் மாச்சீர் நின்ற விடத்தில் மற்ற அடிகளிலும் மாச்சீரும், விளச்சீர் நின்ற விடத்தில் விளச்சீரும், காய்ச்சீர் நின்றவிடத்தில் காய்ச்சீரும் கனிச்சீர் நின்ற விடத்தில் கனிச்சீரும் நிற்பதாம்.

எடு:-

66

‘ஏதங்க ணீங்க வெழிலிளம் பிண்டிக்கீழ்-புறாவே

வேதங்க ணான்கும் விரித்தான் விரைமலர்மேல்-புறாவே பாதம் பணிந்து பரவுதும் பல்காலும்-புறாவே.'