உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

எடு :-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எந்தை திருத்தா ளெழுகங்கை யீறுமா

விந்தமல ராட்கிசைந்த வீறினுக்கு - முந்தெழுத்துஞ் சித்தசனன் வாண்முதலுஞ் சேயிழையாய் சேர்த்தக்கா லத்தமெழி லோலைப் பூ வாம்.

அகமகிழ்ச்சியணி

ன்றன்குணத்தினாலாவது,

குற்றத்தினாலாவது,

மற்றொன்றுக்குக் குணமாவது, குற்றமாவது உண்டாதலைச் சொல்லுவது. இஃது அகமலர்ச்சியணி. உல்லாச அலங்காரம் எனவுங் கூறப்பெறும்.

அச்சச்சுவை

சுவையலங்கார வகைகளுள் ஒன்று அது அச்சமென்னும் மெய்ப்பாட்டால் நெஞ்சில் நிகழுந் தன்மைகள் புறத்துப் புலனாய் விளங்குமாறு பாடுவது.

அடுக்கணி

சிறப்பை வெளிப்படுத்தவும். அன்பு, துன்பம், மகிழ்ச்சி ஆகியவற்றை மிக்கதெனத் தோற்றும் ஒரு பொருளைத்தரும் பல திரிசொற்களை அடுக்கித் தொடுப்பது அடுக்கணியாகும்.

எடு :-

“என்னுயிர் காத்துப் புரந்தாண்ட வென்னிறைவன் தன்னுயிர் பட்டிறந்து சாய்ந்தொழிந்தான் - பின்னுயிராய் மீண்டென்னைக் காத்தோம்ப மேவிப் புரந்தளிப்ப

யாண்டையும் யார்யா யெனக்கு'

இதில் துன்பத்தின் மிகுதியைக் காட்டப் பலதிரி சொல் அடுக்கி வந்தவாறு காண்க.

அதிசயவணி

கவிஞன்தான் கருதிய பொருளினது அழகை உவந்து சொல்லுங்கால். உலக நடையிறவாத தன்மைத்தாகி உயர்ந்தோர் வியப்புறச் சொல்லுவது அதிசயம் என்னும் அணியாம். அவ்வணி பொருளதிசயம், குணவதிசயம், தொழிலதிசயம், ஐயவதிசயம், துணிவதிசயம், திரிபதிசயம் இ டவதிசயம், சினையதிசயம் காலவதிசயம் என்று ஒன்பது வகைப்படும்.