உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

421

எடு :-

பண்டு புரமெரித்த தீமேற் படர்ந்தின்றும்

அண்ட முகடு நெருப்பறா - தொண்டளிர்க்கை வல்லி தழுவக் குழைந்த வடமேரு

வில்லி நுதன்மேல் விழி.

(நெருப்பு -இடி.

அநியம வுவமை

இது உவமை வகைகளுள் ஒன்று. நியமித்த வுவமையை விலக்கிப் பிறிதோர் உவமை புணர்த்துக் கூறுவது அநியமவுவமை

யாம்.

எடு :-

“கௌவை விரிதிரைநீர்க் காவிரிசூழ் நன்னாட்டு மௌவல் கமழுங் குழன்மடவாய் – செவ்வி மதுவார் கவிரேநின் வாய்போல்வ தன்றி அதுபோல்வ துண்டெனினு மாம்'

அநேகாங்க வுருவகம்

இது உருவக அணிவகைகளுள் ஒன்று. ஒரு பொருளின் உறுப்புக்கள் பலவற்றையும் உருவகஞ்செய்து உரைப்பது அநேகாங்க வுருவகமாகும்.

எடு :-

“கைத்தளிராற் கொங்கை முகிழ்தாங்கிக் கண்ணென்று மைத்தடஞ்சேண் மைந்தர் மனங்கலங்க - வைத்ததோர் மின்னுளதான் மேக மிகையுளதான் மற்றதுவும் என்னுளதா நண்பா வினி”

அந்தாதி

ஓரடியின் அல்லது ஒரு செய்யுளின் ஈற்றில் வருஞ்சொல் அடுத்த அடியின் அல்லது அடுத்த செய்யுளின் முதலில்வரத் தொடுப்பது அந்தாதியாகும். அந்தம் ஆதியென்பது, அந்தாதி யென்றாயது; அந்தம்-ஈறு; ஆதி-முதல்; அந்தமே முதலில் வருவது என்பது இதன் பொருள்.