உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடு :-

அணி

423

“உனதுபிர தாப முயிரிழந்த தெவ்வர்

மனைவியரா னோருறுப்பின் மண்ணும் - சினவிழியின் நாரமுநெஞ் சிற்றீயு நாசியிற்கா லும்மறிவின்

ஆரும் வெளியுருவு மாம்

இதில், ஐம் பூதங்களும் முறைபிறழாமற் சொல்லப் பட்ட ன.

அவயவவுமை

அவயவத்தை உவமித்து அவயவியை உவமிக்காது கூறுவது அவயவவுவமை என்பதாம்.

எடு :-

“மாத ரிலவிதழ்போன் மாண்பிற்றே மாதவனால் வானோ ரருந்து மருந்து

அவயவியுவமை

அவயவியை உவமித்து அவயத்தை உவமியாது கூறுவது அவயவியுவமையாம்.

எடு :-

“பொன்னங் கொடியனைய பொற்றொடிதன் றாட்சுவடு

மென்னன் புறத்தோன்று மிங்கிவைக - என்னங்

கடிக்கமலஞ் சேரரங்கர் கானிகராங் காளை

யடிச்சுவடு மாங்கவையே யாம்.

அவயவவுருவகம்

உறுப்புக்களை உருவகஞ்செய்து அவயவியை உருவகஞ் செய்யாது கூறுவது அவயவவுருவகமாகும்.

எடு :-

“புருவச் சிலைகுனித்துக் கண்ணம்பெ னுள்ளத்

துருவத் துரந்தா ரொருவர் - அருவி

பொருங்கற் சிலம்பிற் புனையல்குற் றேர்மேல்

மருங்குற் கொடிநுடங்க வந்து