உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

அவயவி வுருவகம்

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அவயவியை உருவகஞ்செய்து உறுப்புக்களை உருவகஞ் செய்யாது வாளாவே கூறுவது அவயவியுருவகமாகும்.

எடு :-

“வார்புருவங் கூத்தாட வாய்மழலை சோர்ந்தசைய வேரரும்பச் சேந்து விழிமதர்ப்ப - மூரல்

அளிக்குந் தெரிவை வதனாம் புயத்தால் களிக்குந் தவமுடையேன் கண்'

அவநுதியணி

சிறப்பினதூஉம். பொருளினதூஉம். குணத்தினதூஉமான உண்மையை மறுத்துப் பிறிதொன்றாக உரைப்பது அவநுதி என்னும் அணியாம். (அவநுதி - மறுத்துரைத்தல்.)

எடு :-

66

“நறைகமழ்தார் வேட்டார் நலனணியு நாணும்

நிறையு நிலைதளரா நீர்மை- அறநெறிசூழ்

செங்கோல னல்லன் கொடுங்கோலன் றெவ்வடுபோர் வெங்கோப மால்யானை வேந்து”

இங்கே அரசனைச் சிறப்பித்தற்கண் ‘செங்கோலன்' என்ற சிறப்புண்மையை மறுத்து, 'கொடுங்கோலன்' எனப் பிறிதொரு தன்மையை யேற்றிக்கூறியமை காண்க.

அவநுதி யுருவகம்

உவமேயத்தை மறுத்து உவமானத்தால் உருவகித்து உவ மேயத்தைச் சிறப்பித்தல் அவநுதியுருவகமாகும்.

(அவநுதி

-

உண்மையை மறுத்தல்.)

எடு :-

“பொங்களக மல்ல புயலே யிதுவிவையும்

கொங்கை யிணையல்ல கோங்கரும்பே - மங்கைநின்

மையரிக்க ணல்ல மதர்வண் டிவையி வையும்

கையல்ல காந்தண் மலர்”

இதனுள், உண்மைப் பொருளை மறுத்து ஒப்புமைப் பொருளையுடன் பட்டமையான், அப்பெயர்த்தாயிற்று. மேலும்