உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

425

உண்மையாகிய அளகம் முதலியன மறுக்கப்பட்டவாறும், புயல் முதலியனவாக உருவகஞ்செய்யப்பட்டவாறும் அறிக.

அவிரோதச்சிலேடை

முன்னர்ச் சிலேடித்த பொருளைப் பின்னர் விரோதியாமற் சிலேடிப்பது அவிரோதச் சிலேடையாகும்.

எடு :-

“சோதி யிரவி கரத்தா னிரவொழிக்கும்

மாதிடத்தான் மன்மதனை மாறழிக்கு - மீதாம் அனகமதி தோற்றிக் குமுத மளிக்கும்

தனத னிருநிதிக்கோன் றான்”

அவிருத்த வுருவகம்

து உருவக அணி வகைகளுள் ஒன்று. ஒரு பொருட்குப் பொருந்தக்கூடியதன்மை பலவுங்கூட்டி யுருவகஞ் செய்வது அவிருத்த வுருவகமாகும்.

எடு :-

“ஓர்பொழுதுந் துஞ்சா தலமந் துறுதுளித்தாம்

போர்புனை வேலண்ணல் பொருட்கேகிற் - சீர்பெருகுந்

தண்ணார் பசுந்துளபத் தார்மார்பன் றஞ்சைமான்

கண்ணா கிய கார்க் கடல்.”

அழிவுபாட்டபாவம்

இதுவும் அபாவ வேதுவின் பாற்படும். முன்புள்ளது அழிவு பட்ட தன்மையைக் கூறுவதாம்.

எடு :-

கழிந்த திளமை களிமயக்கந் தீர்ந்த

தொழிந்தது காதன்மே லூக்கம் - சுழிந்த

கருநெறியுங் கூந்தலார் காதனோய் தீர்ந்த

தொருநெறியே சேர்ந்த துளம்’

அற்புதவுருவகம்

கேட்போர் வியக்குமாறு வியப்புச் சு சுவை உருவகஞ்செய்து உரைப்பது அற்புத வுருவகமாகும்.

தோன்ற