உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

427

இதனை வடநூலார் ‘அவக்ஙியலங்கார’ மென்பர். இவ்வணி இரண்டு வகைப்படும். அவை குணத்தினாற் குணமுண்டாகாமை, குற்றத்தாற் குற்றமுண்டாகாமை என்பனவாம்.

(1) குணத்தினாற் குணமுண்டாகாமை.

66

'ஆழ வமுக்கி முகக்கினு மாழ்கடனீர்

நாழி முகவாது நானாழி”

இதில், கடலின் பெருமைக் குணத்தால் நாழிக்கு அதிக நீர் கொள்ளலாகிய குணமுண்டாகாமை கூறப்பட்டது.

(2) குற்றத்தாற் குற்றமுண்டாகாமை

“கமலமலர் தற்கண்டு கூம்புதலாற் காமர்

அமுதகிர ணற்கென் குறைவு

இதில், கமலங் கூம்புதற் குற்றத்தாற் சந்திரனுக்குக் குறை வாகிய குற்றமுண்டாகாமை கூறப்பட்டது.

இடைநிலைக் குணத்தீவகம்

செய்யுளின் இடையில் நிற்கும் பண்புச் சொல் ஒன்று அச் செய்யுளில் பலவிடத்தும் நிற்கும் மற்றைச் சொற்களோடு சேர்ந்து பொருள் விளைவிப்பது இடைநிலைக் குணத்தீவகமாகும்.

எடு

எடுத்து நிரைகொணா வென்றலுமே வென்றி வடித்திலங்கு வைவாளை வாங்கத் - துடித்தனவே தண்ணார மார்புந் தடந்தோளும் வேல்விழியும் எண்ணாத மன்னர்க் கிடம்’”

தில், துடித்தன என்னும் பண்புணர்த்துஞ் சொல் மார்பு என்பது முதலியவற்றோடு சென்றியைந்து பொருள் தந்தமை காண்க.

இடைநிலைச் சாதித்தீவகம்

செய்யுளின் இடையில் நிற்கும் சாதியைக் குறிக்கும் ஒரு சொல் அச்செய்யுளில் பலவிடங்களிற் நிற்கும் மற்றைச் சொற் களோடு பொருந்திப் பொருள் விளைவிப்பது இடைநிலைச் சாதித்தீவகம்.

எடு :-

“கரமருவு பொற்றொடியாங் காலிற் கழலாம்

பொருவில் புயவலய மாகும் - அரவரைமேல்