உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

இளங்குமரனார் தமிழ்வளம் 4

நாணா மரற்கு நகைமணிசேர் தாழ்குழையாம் பூணாம் புனைமாலை யாம்’

இதில் இடைநின்ற அரவு என்னும் பாம்புகளின் சாதிப் பெயர் ‘தொடியாம்' என்பது முதலியவற்றோடு சென்றியைந்து பொருள் தந்தமையான் இஃது இடைநிலைச் சாதித் தீவகமாகும். இடைநிலைத் தொழிற்றீவகம்

செய்யுளின் இடையில் நிற்கும் தொழிலைக் குறிக்கும் ஒரு சொல் அச்செய்யுளில் பலவிடத்தும் நிற்கும் மற்றைய சொற் களோடு சேர்ந்து பொருள் தருவது இடைநிலைத் தொழிற்றீவக மாகும்.

எடு :-

66

“எடுக்குஞ் சிலைநின் றெதிர்ந்தவருங் கேளும் வடுக்கொண் டுரந்துணிய வாளி - தொடுக்கும் கொடையுந் திருவருளுங் கோடாத செங்கோல் நடையும் பெரும்புலவர் நா

இதில் இடையிலே நின்ற தொடுக்கும் என்னும் தொழிலு ணர்த்துஞ் சொல், கொடை, அருள், செங்கோலின் நடை என்ப வற்றோடு சென்றியைந்தமையால், இஃது இடைநிலைத் தொழிற் றீவகமாயிற்று.

இடைநிலைப்பொருட்டீவகம்

செய்யுளின் இடையில் நிற்கும் பொருட்பெயர் அச்செய்யுளில் பலவிடங்களில் நிற்கும் பலசொற்களோடு பொருந்திப் பொருள் விளைவிப்பது இடைநிலைப் பொருட்டீவகம் என்னும் அணியாம். எடு :-

“மானமருங் கண்ணாள் மணிவயிற்றில் வந்துதித்தான் தானவரை யென்றுந் தலையழித்தான் - யானைமுகன் ஓட்டினான் வெங்கலியை யுள்ளத் தினிதமர்ந்து வீட்டினா னம்மேல் வினை’

இதில், இடைநின்ற யானைமுகன் என்பது உதித்தான் என்பது முதலியவற்றோடு சென்றியைந்து பொருள்தந்து நின்றமையான் இஃது இடைநிலைப் பொருட்டீவகமாயிற்று.

6