உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

429

இடைமுற்று மடக்கு

செய்யுளில் எல்லா வடிகளின் இடையிலும் ஒரேவிதமான சொற்கள் மடங்கி வந்து வேறு வேறு பொருள் வரத் தொடுப்பது இடைமுற்று மடக்கு என்னும் அணியாம்.

எடு :-

"மனமேங் குழைய குழைவாய் மாந்தர்

இனனீங் கரிய கரிய - புனைவதனத்

துள்வாவி வாவிக் கயலொக்கு மென்னுள்ளம்

கள்வாள வாளவாங் கண்

எல்லாவடிகளின் இடையிலும், “குழைய குழைய, கரிய கரிய, வாவிவாவி, வாளவாள

வந்திருத்தலைக் காண்க.

இடையினப் பாட்டு

என்று சொற்கள் மடங்கி

இடையினம் ஆறும் வரத் தொடுப்பது இடையினப்

பாட்டாகும்.

எடு :-

“யாழியல் வாய வியலள வாயவொலி

யேழிய லொல்லாவா லேழையுரை - வாழி

யுழையே லியலா வயில்விழி யையோ

விழையே லொளியா லிருள்.'

இணையெதுகை யலங்காரம்

வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் ஏனைப் பாவினமெனத் தோன்றப்பட்ட செய்யுளகத்துப் பெருக வரும் இணையெதுகை நடையினையும் எதுகையலங்கார மென்று கூறப்படும்.

இயம்புதல் வேட்கை யுவமை

து

இது உவமை வகைகளுள் ஒன்று. பொருளை (உவமேயம்) ன்னது போலுமென்று சொல்ல விரும்புகிறது என்னுள்ளம் என்பதாம்.

எடு :-

“நன்று தீதென்றுணரா தென்னுடைய நன்னெஞ்சம்

பொன்றுதைந்த பொற்சுணங்கிற் பூங்கொடியே - மன்றல்