உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

இளங்குமரனார் தமிழ்வளம் 4

மடுத்ததைந்த தாமரைநின் வாண்முகத்திற் கொப்பென் றெடுத்தியம்ப வேண்டுகின்ற தின்று”

யைபுருவக அணி

இது உருவக அணி வகைகளுள் ஒன்று. இது தொடர்பினுள் பல பொருளையும் உருவகஞ் செய்யுங்கால் தம்முள் காரணகாரிய மியைபுடைத்தாக வைத்து உருவகஞ் செய்து பாடுவதாம்.

எடு :-

“செவ்வாய்த் தளிரு நகைமுகிழுங் கண்மலரும் மைவா ரளக மதுகரமும் - செவ்வி

உடைத்தாந் திருமுகமென் னுள்ளத்து வைத்தார் துடைத்தாரே யன்றோ துயர்

இயைபிலுருவக அணி

இது உருவக அணி வகைகளுள் ஒன்று. பலபொருள்களை உருவகஞ்செய்யுங்கால் அப்பொருள்கள் தம்முள் பொருந் தாமையை வைத்து உருவகஞ் செய்து பாடுவது இயைபிலுருவக அணியாம்.

எடு :

"தேனக் கலர்கொன்றை பொன்னாகச் செஞ்சடையே

கூனற் பவளக் கொடியாகத் - தான மழையாகக் கோடு மதியாகத் தோன்றும் புழையார் தடக்கைப் பொருப்பு’

இயைபின்மையணி

ஒரு வாக்கியத்துள் ஒரு பொருளையே உபமானமாகவும் உபமேயமாகவுஞ் சொல்லுதலாம். இதனை வடநூலார் ‘அநந் வயாலங்கார'மென்பர்; தண்டியாசிரியர் ‘பொதுநீங்குவமை'

யென்பார்.

எடு :-

தேனே யனையமொழிச் சேயிழையாள் செவ்வியினால்

தானே உவமை தனக்கு.

இரங்கல் விலக்கு

இரங்கல் தோன்றக் கூறிவிலக்குவது இரங்கல் விலக்கு

என்னும் அணியாம்.

>