உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

431

எடு :-

ஊச றொழிலிழக்கு மொப்பு மயிலிழக்கும் வாசஞ் சுனையிழக்கும் வள்ளலே - தேசு பொழிலிழக்கு நாளையெம் பூங்குழலி நீங்க எழிலிழக்கு மந்தோ விவண்.

இரண்டாமடி முதன் மடக்கு

செய்யுளின் இரண்டாம் அடியின் முதலில் நின்ற ஒரே சொல் மடங்கி வந்து வேறுவேறு பொருள் வரத் தொடுப்பது இரண்டாமடி முதன் மடக் கென்னும் அணியாம்.

எடு :

66

கனிவா யிவள்புலம்பக் காவலநீ நீங்கில்

இனியா ரினியா ரெமக்கு.”

இரத்தின மாலையணி

வருணிக்கவேண்டிய பொருள்களை யுலகத்திற் புகழ்பெற்ற தாக விருக்கின்ற முறைமை வழுவாமற் கூறுவது இரத்தினமாலை யணி எனப்படும்.

எடு :-

“மாரதுவசத் தின்னுளதாய்க் கூர்மஞ் சார்ந்து வராகமதாய்ச்

சாரு மருந்தூ ணுதிப்பதுமாய்த் தாங்கு மருங்குறு வாமனமா யாரும் பரசு ராமமுமாய் வனவா சங்கொட லம்பொருந்திப்

பாரக் கலையேந்திப்பரிமு கங்கொண்டிடும் பெண்பருமுலையே.”

இதில், மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமன், இராகவன், பலராமன், கிருட்டிணன், கல்கி என்று உலகத்தில் புகழ்பெற்ற மாதவனது பத்து அவதாரத்தையும் முறைபிறழாமல் கூறப்பட்டிருப்பது காண்க.

இருமை யியற்கை

இதுவும் வேற்றுப் பொருள் வைப்பணியின் வகைகளுள் ஒன்று. கூடாததனையும் கூடுவதனையும் ஒருங்கே கூட்டிக் கூறுவது இருமையியற் கையாம்.

எடு :-

"கோவலர்வாய் வேய்ங்குழலே யன்றிக் குரைகடலும்

கூவித் தமியோரைக் கொல்லுமால் - பாவாய்!