உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

இளங்குமரனார் தமிழ்வளம்

4

இதன் ஈற்றடியில் ‘மலையா மலையா' என்றொரு சொல் மடங்கினமையறிக.

உடன்படல் விலக்கு

உடன் பட்டார்ப் போல விலக்குவது உடன்படல் விலக்கு என்னும் அணியாம்.

எடு

“அப்போ தடுப்ப தறியே னருள்செய்த

இப்போ திவளு மிசைகின்றாள் - தப்பில் பொருளோ புகழோ தரப்போவீர் மாலை இருளோ நிலவோ வெழும்.

உடனிகழ்ச்சியணி

கற்றோரை மகிழ்விக்கும் உடனிகழ்தலைச் சொல்லு தலாம். இதனை வடநூலார் ‘சகோக்தியலங்கார’ மென்பர். இதற்கு ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமையுருபுவரும். எடு :-

"இகந்த பகைவ ரினத்தொடுவேல் வேந்தே திகந்த மடைந்ததுநின் சீர்.”

உபாயவணி

யாதாயினும் ஓர் ஊதியம் பெறுதற்கு மிக்க காரண

மென்று கூறப்படும் முக்கியமான தொரு சூழ்ச்சியை

-

யுணர்த்துதல் உபாயவணியாகும். (சூழ்ச்சி உணர்வோடு உசாவியுண்டான வுறுதியறிவு.)

எடு :-

66

“சூடிக் கழித்த துளபச் சருகெனினு நாடித் தருக திருநாகையா - யூடிப்

புலவா ததற்கு நினதருட்கும் பொற்றோள்

கலவாத வெற்குநலங் காண்.'

பாயவிலக்கு

விலக்குவதனை ஒரு உபாயம் (தந்திரம்) காரணமாக விலக்குவது உபாயவிலக்கு என்னும் அணியாம்.