உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடு :-

அணி

437

“இன்னுயிர் காத்தளிப்பாய் நீயே இளவேனில்

மன்னவனுங் கூற்றுவனும் வந்தணைந்தால் - அன்னோர் தமக்கெம்மைத் தோன்றாத் தகைமையதோர் விஞ்சை எமக்கின் றருள்புரிந்தே யேகு”

உயர்ச்சிவேற்றுமையணி

உவமானத்தினின்றும் உவமேயத்திற்கு உயர்ச்சியாகிய வேற்றுமை சொல்லப்படுவது உயர்ச்சி வேற்றுமையணியாகும்.

எடு :

"மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்முள்

ஒலியும் பெருமையு மொக்கும் - மலிதேரான்

கச்சி படுவ கடல்படா கச்சி

கடல்படுவ வெல்லாம் படும்”

ச்செய்யுளில், முன்னிரண்டு அடிகளால் ஒலியாலும் பெருமையாலும் வெளிப்படையாகக் கச்சிக்கும், கடலுக்கும் ஒப்புமை கூறிப் பிறகு கடலினுங் கச்சிக்கு உயர்வு கூறினமை காண்க.

உயர்வு நவிற்சியணி

ஒரு பொருளானது தன் சொல்லாற் சொல்லப்படாமல் கேட்போரை மகிழ்விப்பதும், இஃது அஃதன்று என்று தெரிந்துந் தன்விருப்பத்தாற் கொள்ளப் படுவதுமாகிய (ஆரோப நிச்சயத் திற்கு) பொருளாகுதல் உயர்வு நவிற்சியணியாகும். இதனை ‘அதிச யோக்தியலங்காரம்’ என்றுங் கூறுவர். இவ்வணி உருவக உயர்வு நவிற்சி, ஒழிப்புயர்வு நவிற்சி, விரைவுயர்வு நவிற்சி, மிகையுயர்வு நவிற்சி எனப்பல வகைப்படும். இறுதிக் கண் நின்ற மூன்றணிகளும் காரிய விரைவைச் சொல்லுவனவாம். உயர்வின் வீழ்ச்சியணி

மிக உயர்ந்த ஒன்றிலிருந்து மிகத் தாழ்ந்த ஒன்றிற்குத் திடீரென இழிதல் உயர்வின் வீழ்ச்சி என்னும் அணியாம். எடு:-

66

'தாவரு மிருவினை செற்றுத் தள்ளரும்

மூவகைப் பகையரண் கடந்து முத்தியில்