உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

இளங்குமரனார் தமிழ்வளம்

4

போவது புரிபவர் மனமும் பொன்விலைப் பாவையர் மனமும்போற் பசையு மற்றதே”

இதில் மிக உயர்ந்த நிலையில் உள்ள பற்றற்ற முத்தர் களையும், மிகத் தாழ்ந்த நிலையில் உள்ள பரத்தையர்களையும் ஒரே வரிசையில் வைத்துப் பாலையின் பசையற்ற தன்மையைத் தோற்றுவித்தலில் இவ்வணி அமைந்திருத்தலையறிக.

உய்த்துணர் வணி

ஒரு காரியம் முற்றுப் பெறுவதற்கு இஃது இவ்வாறு என ஊகித்தல் உய்த்துணர் வணியாம். இதனை வடநூலார்

'சம்பாவவலங்கார' மென்பர்.

எடு :-

66

"சேடுறுநங் கோன்புகழைச் சேடனவி லத்தொடங்கின் பீடுறவே முற்றுப் பெறும்”

உருவக அணியின் இலக்கணம்

உவமானம் உவமேயம் என்னும் இரண்டற்குமுள்ள வேறு பாட்டை நீக்கி, ஒன்றென்பதோர் உள்ளுணர்வு தோன்ற ஒற்றுமைப்படுத்திக் கூறுவது உருவக அணியாம். அஃதாவது, உவமேயத்தில் உவமானத்தை ஏற்றிக் கூறுதலாம். அவ்வாறு கூறுங்கால் முக்கியப் பொருண் முன்னும் உவமப் பொருள் பின்னுமாக வருதல் வேண்டும். இவ்வணியை வடநூலார் 'ரூபகாலங்கார’ மென்பர்.

எடு :-

கொங்கைக் குரும்பை, வாய்ப் பவளம். உருவக உயர்வு நவிற்சியணி

து உயர்வு நவிற்சியணி வகைகளுள் ஒன்று. உவமேயத்தை அதன் சொல்லாற் சொல்லாமல், உவமானச் சொல்லினால் இலக் கணையாகச் சொல்லுதலாம்.

எடு :-

“புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்

கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின்

அயலே பசும்பொற் கொடிநின்ற தால் வெள்ளை யன்னஞ்செந்நெல் வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலயத்திலே.