உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

439

தில், புயல் முதலிய உவமானச் சொற்களாற் கூந்தல் முதலிய உவமேயங்கள். இலக்கணையாகச் சொல்லப்பட்டன. உருவக வுருவகம்

து உருவக அணிவகைகளுள் ஒன்று. ஒரு பொருளை உருவகஞ்செய்து அதனையே மீண்டும் பிறிதொன்றாக உருவகஞ்செய்து உரைப்பது உருவகவுருவகமாகும்.

எடு :

66

'கன்னிதன் கொங்கைக் குவடாங் கடாக்களிற்றைப் பொன்னெடுந்தோட் குன்றே புனைகந்தா - மன்னவநின்

ஆகத் தடஞ்சே வகமாக யானணைப்பல்

சோகித் தருளேற் றுவண்டு.”

இதில், மார்பை மலையாக வுருவகஞ் செய்து அதனையே மீண்டும் களிறாக உருவகஞ் செய்தவாறு அறிக.

உலகவழக்கு நவிற்சியணி

அஃதாவது, உலக வழக்குச் சொல்லைத் தழுவிக் கொண்டு செலுத்துதலாம். இதனை வடநூலர் 'லோகோக்தியா லங்கார‘ மென்பர்.

எடு :-

“அண்ணனீ பேசாதைந் தாறுமா தம்வரையில்

கண்ணைமூ டிக்கொண் டிரு.

உல்லேகவணி

99

புலவனாற் குறிக்கப் பட்டதோர் உவமேயப் பொருட்கு உவமவுருபு மறைந்து நிற்கப் பல்வேறு வகையாய்க் கவர்த்த வினை, பயன், மெய், உரு வென்னுங் காரணங்களால் ஒத்த உவமானப் பொருள்களை அதற்குக் கூறுவது அதற்குக் கூறுவது உல்லேகம் என்னும் அணியாம்.

எடு :-

“என்னாருயிரென்னிரு கண்மணி யென்னிதயத்துள்ளாய் மன்னார்மிந்த மென்மெய்க் கணியாரம் வகுளப் பிரான் முன்னாளெனையடிமை கொண்ட பேரருண்மூர்த்தி மண்மே னன்னாவலர் தம்பிரானுயர் வானவர் நற்றுணையே."