உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

உவமையணி

இளங்குமரனார் தமிழ்வளம்

4

இரண்டு பொருள்களுக்கு ஒப்புமையை விளங்கச் சொல்லு வது உவமையணியாம். இதனை வடநூலார் 'உபமாலங்கார’ மென்பர்.

உவமைப் பொருள்பின் வருநிலையணி

ஒரே பொருளைக் குறிக்கும் வேறு வேறு சொற்கள் ஒரு பொருளைக் குறிக்காமல் உவமைவாயிலாக வேறு வேறு பொருள்களைக் குறிப்பது உவமைப் பொருள் பின்வருநிலை யணியாகும்.

எடு :

“செங்கமல நாட்டம் செந்தாமரை வதனம்

பங்கயச் செவ்வாய் பதுமம்போல் செங்கரங்கள்

-

அம்போரு கந்தாள் அரவிந்தம் மாரனார்

தம்போ ருகந்தாள் தனம்.

99

இதில், தலைவியின் கண், முகம், வாய், கை, பாதம், தனம் ஆகிய உறுப்புகளுக்குத் தாமரையை உவமானமாகக் கொண்டு, அத்தாமரையைக் கமலம், செந்தாமரை, பங்கயம், பதுமம், அம்போருகம், அரவிந்தம் என்ற சொற்களால் குறித்திருப்பதை அறியலாம்.

உவமை யுருவகம்

உவமேயம் உவமானம் ஆகிய இரண்டையும் ஒப்புமை காட்டி உருவகஞ் செய்வது உவமை யுருவகமாகும்.

எடு :-

“மதுமகிழ்ந்த மாதர் வதன மதியம்

உதய மதியமே யொக்கும் - மதிதளர்வேன் வெம்மை தணிய மதராக மேமிகுக்கும் செம்மை யொளியிற் றிகழ்ந்து’

இதனுள், முக்கியப் பொருளையுங் குணப்பொருளையும் ஒப்புமை காட்டினமையான் உவமை யுருவகமாயிற்று.

முக்கியப் பொருள் உவமேயம். குணப்பொருள்

உவமானம்.