உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

4 இளங்குமரனார் தமிழ்வளம்

யுடைத் தெனக் கூறுவது உறுசுவையென்னும் அணியாம். இதனைவட நூலார் 'சார வலங்கார' மென்பர்.

எடு :-

“நால்வகைத்தாய்த் தோற்ற நயந்தபூந் தேன்சுவையிற் சால்புடைத்தாமுக்கனியுட் சார்சுவையின் - ஞாலமெலா மிக்கதெனு மான்பாலுள் வீழ்சுவையினாம் விரும்பத் தக்கதெனும் பஞ்சதா ரையினி - லக்கடல்வாய்த் தோற்றமுறும் புத்தேளிர் துப்புரவாந் தெள்ளமுதி னேற்றமுறு மின்சுவைத்தா மீதென்னுந் - தேற்றமதாங் கற்றவர்கொ ணாவீறன் காரி தருமாறன் சொற்றமிழ்ப்பா நல்குஞ் சுவை.

எடுத்துக்காட்டுப் பிரமாணவணி

தோற்ற முதல்வன் (மூலபுருடன்) குறிப்பின்றி யுலகவழக்க மான பழமையைக் கூறுவது எடுத்துக் காட்டுப் பிரமாணவணி யாகும்.

.

எடு :

சாகா திருக்கு மனிதனிடந் தனிலே பலவாண் டகன்றேனும் வாகா மகிழ்ச்சி யானதுவந் தடையு மெனவே மாநிலத்தி லேகா ணிந்தக் காதைமிக மேன்மை மிசைந்த தாகவுமே யாகா யமதிற் றெரிந்திடுதல் அகம்போ லறிய வருமெனக்கே. எடுத்துக்காட்டுவமை

உவம உருபு கொடாமல், உவமான உவமேயங்கள் தனித் தனியாக நிற்கத் தொடுப்பது எடுத்துக் காட்டுவமையாகும். எடு :-

66

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

எதிர் நிலையணி

உவமானத்திற்குக் குறைவுதோன்றச் சொல்லுதலாம். இஃது உவமையணிக்கு எதிரியதாய் நிற்றலின் அப்பெயர் பெற்றது. இதனை வடநூலார் ‘பிரதீபாலங்கார’ மென்பர். இவ்வணி ஐந்து வகைப்படும்.