உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஏகாங்கவுருவகம்

து உருவக அணிவகைகளுள் ஒன்று. ஒரு பொருளினது அங்கம் பலவற்றுள்ளும் ஓரங்கமே யுருவகஞ்செய்து ஒழிந்த அங்கங்களை உருவகஞ் செய்யாது கூறுவது ஏகாங்கவுருவக மாகும்.

L

எடு

66

காதலனைத் தாவென் றுலவுங் கருநெடுங்கண்

ஏதிலனால் யாதென்னு மின்மொழித்தேன் - மாதர் மருண்ட மனமகிழ்ச்சி வாண்முகத்து வந்த இரண்டினுக்கு மென்செய்கோ யான்.

ஏகாவளியணி : (அ)

ஒரு முதன்மைப் பொருளை முதல் வைத்து அதற்கு உயர் வினையே தருவதாகப் பிறிதொரு கூட்டத்தினுள் ஒரு முதன்மைப் பொருளை அதன்மேல் வைத்து அப்படிப்பலசால்பின் முதன்மைப் பொருள்களை யொன்றோடொன்று ஏற்புடையனவாகத் தொடர்புபடுத்தி முதன்மைப் பொருள் தருமாறு வுரைப்பது ஏகாவளியணியாம்.

ஏகாவளியென்பது பலவளையத்தை யொன்றாக்கப்பட்ட சங்கிலி போலத் தொடர்தலின் அப்பெயர்த்தாயிற்று.

எடு :-

66

அவையாதல் சான்றோருண் டாயதே சான்றோர்

நவையறு நன் னூலுணர்ந்தோர் நன்னூ - லெவையுமா

மொன்றா மதனை யுணர்த்தலது வுந்திருவைக் குன்றாதே கூடியதா கும்.

ஏகாவளியணி : (ஆ)

பின்பின்னாக வருவனவற்றிற்கு முன்முன்னாக வருவன வற்றை விசேடியங்களாகவேனும், விசேடணங்களாக வேனும் ஆவது ஏகாவளியாகும். இதனை ஒற்றைமணி மாலையணி எனவுங் கூறுவர்.