உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

445

இதில், ஏகு என்னும் உடன்பாட்டுச் சொல்லாற் போகேல் என்னும் மறுப்பு சுற்றத்தழுகையாற் குறிக்கப்பட்ட தலைவிக்கு மென்பதைக் கொண்டு காட்டப்பட்டது.

எளிதின் முடிபணி :

ஒருவன் செய்யத் தொடங்கிய காரியம் மற்றொரு காரண உதவியால் எளிதில் முடிதலாம். இதனை வடநூலார் 'சமாதிய லங்கார' மென்பர்.

எடு :-

“மதிநுதலாட் கியானூடல் மாற்றத் தொழும்போ

துதவிமுகில் செய்தன் றொலித்து.’

என்றுமபாவம் :

وو

இது அபாவவேதுவின் வகைகளுள் ஒன்று. எக்காலத்தும் இல்லாமையைக் கூறுவது என்றுமபாவமாகும்.

எடு :-

“யாண்டு மொழிதிறம்பார் சான்றவ ரெம்மருங்கும் ஈண்டு மயில்க ளினமினமாய் - மூண்டெழுந்த காலையே கார்முழங்கு மென்றயரேல் காதலர்தேர் மாலையே நம்பால் வரும்.'

ஏகதேச வுருவகஅணி

-

இது உருவக அணிவகைகளுள் ஒன்று. ஒரு செய்யுளில் ஓரிடத்து ஒருபொருளை உருவகஞ்செய்யுங்கால் மாட்டேறு பெற வுருவகஞ் செய்து அப்பொருளோடு இயைபுபடப் பிறிதோர் பொருளைச் சய்யுளகத்து மற்றோரிடத்து மாட்டேறு பெற பற வுருவகஞ் செய்யாது தொகைநிலை வாய்பாட்டாற் கூறுவது ஏகதேசவுருவக அணியாம்.

எடு :-

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் ; நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.”

இதில் பிறவியைக் கடலாக உருவகஞ்செய்து. இறைவன் அடியைப் புணையாக வுருவகஞ் செய்யாது விட்டிருத்தலைக் காண்க.