உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

எதிர்மறையணி :

4 இளங்குமரனார் தமிழ்வளம்

ஒழிப்பணிக்கு வேறாகியும் கேட்போரை மகிழ்விப்ப தாகியும் இருக்கின்ற மறுப்பைச் சொல்லுதலாம். (இது மறுக்க மட்டுஞ் செய்யும். ஒழிப்பணி ஆரோபித்தற் பொருட்கு மறுக்கும்) இதனை வடநூலார் 'ஆக்ஷேபாலங்கார' மென்பர். இவ்வணி மூவகைப்படும்.

தன்னாற் சொல்லப்பட்ட பொருளை ஒரு காரணத் தினால் மறுத்தல்.

எடு :-

66

'ஒண்கதிர்த் திங்காணீ உன்வடிவை யிங்கெமக்குக் கண்களிகூ ரக்கடிது காட்டுவாய் - வண்கவின்கூர் பூண்டாங்கு கொங்கையுடைப் பூவைமுக முண்டதனால் வேண்டாம்போ எற்றுக்கு வீண்.

99

இதில், தான் விரும்பிய நிலவு காண்டலை முகமிருக்கையால் வீணென்று மறுத்தது காண்க.

(2) மறுப்புத் தான் தள்ளுண்டு மற்றொரு பொருளைத் தோன்றச் செய்தல்.

எடு :-

66

தண்ணறா உண்டளிசூழ் தாமமணி திண்டிறற்றோள் அண்ணலே யான்றூதி யல்லேன்காண் - வண்ணமிகு வேயெனுந்தோ ளாள்மெய் விரகதா பம்வடவைத் தீயெனவே தோன்றுஞ் செறிந்து.

இதில், அல்லே னென்னும் மறை தள்ளுண்டு, கூட்டுதற்குத் தக்க வஞ்சச் சொல்லை நீக்கி உண்மை கூறுவோர் தன்மையைக் காட்டிக் கொண்டு விரைந்து வந்து அவளைக் காப்பாற் றென்னும் மற்றொரு பொருளைத் தோற்றிற்று.

எடு :-

66

உடன்பாட்டுச் சொல்லால் மறுப்பைக் காட்டுதல்.

விளைபொருண்மே லண்ணல் விருப்புளையே லீண்டெம்

கிளையழுகை கேட்பதற்கு முன்னே - விளைதேன்

புடையூறு பூந்தார்ப் புனைகழலாய் போக்குக்

கிடையூறு வாராம லேகு.