உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

451

எடு :-

“முத்துக்கோத் தன்ன முறுவன் முறுவலே ஒத்தரும்பு முல்லைக் கொடி மருங்குல்.'

தனுள் முத்துக்களை முறுவலுக்கு உவமையாகக் கூறி அம்முறுவலை முல்லை அரும்புகளுக்கு உவமையாகக் கூறியிருத் தலைக் காண்க.

ஒப்புப் பிரமாணவணி :

ஒப்பான பொருளைக்

கூறி மற்றோர் பொருளை

விளக்குவது ஒப்புப் பிரமாணவணியாகும்.

எடு :-

“மச்சவிழி யாயுடுவின் மண்டலத்தி லேதினிருப் புச்சகடா காரமெனப் போந்திருந்த தோவதையு ரோகணிநா ளென்றறிவு று.

ஒப்புமை யேற்றவணி :

பலபடி யேறினாற்போல நற்குணத்தானுந் தீக்குணத் தானும் ஒன்றற்கொன்று உயர்ந்ததாகப் பலவற்றைக் கூறி யெல்லாவற்றிலும் மேலாகத் தான் கூறிய பொருளே நிற்பதாகக் கூறுவது ஒப்புமை யேற்றம் எனப்படும்

(எடு)

பயனில் சொல் லின்னா மிக் கின்னா மெய்ப் பாட்டி னயனில்சொன் னன்னாடா தன்னை - வியந்தனசொல் லாங்கின்னா பின்னின்றே யம்புற்சொல் லம்மூன்றி னூங்கின்னா வாழு முயிர்க்கு.

ஒப்புமைப் புனைவிலி புகழ்ச்சியணி

இது புனைவிலி புகழ்ச்சியE வகைகளுள்

ஒன்று.

உபமானத்தின் ஒப்புமைத் தொடர்பால் உபமேயந் தோன்றுதலாம்.

எடு :-

“மேதகுசீர்க் காரையன்றி வேறொன் றையுமிரவாச்

சாதகமே புள்ளிற் றலை.