உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஒப்புமைக் கூட்டம் : (ஆ)

வருணியங்களாகிய பலபொருள்களாயினும், அவருணியங் களாகிய பல பொருள்களாயினும் பொதுவாகிய ஒரு தருமத்தில் முடித்தலாம். இதனைவடநூலார் ‘துல்யயோகிதாலங்கார’ மென்பர். இவ்வணி, புனைவுளி ஒப்புமைக் கூட்டம், புனைவிலி ஒப்புமைக் கூட்டம் என இரண்டு வகைப்படும்.

எடு :

66

ம்

(1) புனைவுளி ஒப்புமைக் கூட்டம்

மாமதிதோன் றக்கணவர்த் தீர்ந்தமட வார்முகமும் தாமரைப்பூ வுஞ்சோர்ந் தன.

இதில், சந்திரோதய வருணனையிற் சோர்ந்த தாமரைக்கும், பிரிவுற்ற மாதர் முகங்களுக்கும், வாடுதலாகிய ஒரு கருமத்தால் முடிவு செய்தது காண்க.

(2) புனைவிலி ஒப்புமைக் கூட்டம்.

"தீதில் கழைச்சாறுந் தெள்ளமுத முங்கசக்கும் கோதையிவள் சொல்லுணர்ந் தார்க்கு.

99

இதில் சொல்லின்ப வருணனையில் வருணியங்களாகிய கழைச்சாறு முதலியவைகளுக்குக் கசப்பாகிய ஒரு குணத்திலே முடிவு செய்தது காண்க.

ஒப்புமைக்கூட்டம் (இ)

உறவினரிடத்தும் பகைவரிடத்துஞ் சமனாக நடந்ததாகச் சொல்லுதலும் ஓர், ஒப்புமைக்கூட்டமாம்.

எடு :-

கேடு.

“வீரமிகு மன்னனிவன் விட்டார்க்கும் நட்டார்க்கும் தாரணியி னாக்கினனந் தல்.

தில் நட்டவர்க்கு நந்தல் ஆக்கம்; விட்டவர்க்கு நந்தல்

ஒப்புமையுவமை :

இஃது உவமை வகைகளுள் ஒன்று. உவமேயமே (பொருளே) மற்றொரு பொருளுக்கு உவமையாக வருவது ஒப்புமையுவமையாம்.