உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடு :-

அணி

449

"மின்னோ பொழிலின் விளையாடு மிவ்வுருவம்

பொன்னோ வெனுஞ் சுணங்கிற் பூங்கொடியோ - என்னோ திசையுலவுங் கண்ணுந் திரண்முலையுந் தோளும்

மிசையிருளுந் தாங்குமோ மின்.'

99

இதனுள், மின்னோ கொடியோ என்னும் ஐயம், கண் முதலியவைகளை மின்தாங்குமோ என்பதனால் விலக்கப்

பட்டது.

ஒப்புமைக் கூட்டவணி : (அ)

ஒரு பொருளைச் சொல்லுமிடத்துத் தான் கருதிய குண முதலாயினவற்றின் மிக்க பொருளைக் கூட வைத்துச் சொல்லுவது ஒப்புமைக் கூட்டம் என்னும் அணியாம். அவ்வணி ஒன்றனைப் புகழ்தற்கண்ணும். பழித்தற்கண்ணும் தோன்றும். ஒப்புமைக் கூட்டம் - சமதன்மை யுடையவைகளை ஒருங்கு கூட்டுதல். இதனை வடநூலார் ‘துல்லிய யோகிதை' என்பர்.

1. புகழொப்புமைக் கூட்டம்

எடு :-

“பூண்டாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும் தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும் - நாண்டாங்கு வண்மைசால் சான்றவருங் காஞ்சி வளம்பதியின் உண்மையா லுண்டிவ் வுலகு.

وو

இதில், குழை பொருப்பும், தூண்டா விளக்குமாகிய உயர்ந்த பொருள்களோடு பெரியோரைச் சேர்த்து உயர்த்துக் கூறினமையால், புகழொப்புமைக் கூட்டம் அமைந்திருத்தல்

காண்க.

2. பழிப்பொப்புமைக் கூட்டம்

"கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர்

வல்லே மழையறுக்குங் கோள்.

இதில், மூவரிடத்தும் சேர்க்கப்பட்ட இழிதன்மைகளால் பழிப்பொப்புமைக் கூட்டம் அமைதல் காண்க.