உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருபொருளுவமை :

அணி

453

இஃது உவமை வகைகளுள் ஒன்று. பலபொருட்கு ஒரு உவமை காட்டுவதாம்.

எடு :-

“வண்ண வசைமலர் போற்றி ருமுகமுங்

கண்ணுமலரடியுங் கைக்கொண்ட - பெண்ணரசைச் செந்தமிழ்மா றன்சிலம்பிற் சேர்ந்தகன் றென்பாலுரைக்க வந்தவனே திண்ணியவனா வான்.'

ஒருபொருளுருவகம் :

இது

உருவக அணிவகைகளுள் ஒன்று. ஒன்று. உயர்திணை அஃறிணை யென்று சொல்லப்பட்ட காட்சிப் பொருளுங் கருத்துப் பொருளும் ஒரு செய்யுளகத்து வந்தால் அவற்றுள் ஒரு பொருளை உருவகஞ் செய்து உரைப்பது ஒரு பொருளுருவகமாகும்.

எடு :-

பிறப்பாரி றப்பார் பிறப்பாய வேலை

துறப்பா னொருபோதுந் தூவார் - சிறப்பாகுஞ் செய்படைத்ததென்னரங்கர் சேவடிமேன் மானிடராய்க் கைபடைத்தும் வாழ்ந்த கதை

இதில், அரங்கன், மானிடர்கை, சேவடி என்னும் உயர்திணை அஃறிணைகளை யுருவகஞ் செய்யாது கருத்துப் பொருளாய பிறப்பென்னும் அஃறிணையை உருவகஞ் செய்திருத்தலை

அறிக.

ஒருவழிச் சேறல்

இதுவும் வேற்றுப் பொருள் வைப்பணியின் வகைகளுள் ஒன்று. ஒரு திறமுரைத்தால் அத்திற மெல்லாவற்றின் மேலும் முழுதும் செல்லாது, சிலவற்றின் மேலே செல்வது ஒருவழிச் சேறல் என்னும் அணியாகும்.

எடு :-

66

‘எண்ணும் பயன்றூக்கா தியார்க்கும் வரையாது

மண்ணுலகில் வாம னருள்வளர்க்கும் - மின்னுறுந்தேன் பூத்தளிக்குந் தாராய்! புகழாளர்க் கெவ்வுயிரும்

காத்தளிக்கை யன்றோ கடன்.'