உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஒருவயிற்போலியுவமை

இஃது உவமை வகைகளுள் ஒன்று. ஒரு தொடர் மொழிக் கண் பலவுவமைவந்தால், அவ்வந்த உவமை தோறும் உவமைச் சொற்புணராது ஓருவமைச் சொற்புணர்த்துப் பாடுவதாம்.

எடு :-

66

‘நிழற்கோப மல்க நிறைமலர்ப்பூங் காயா சுழற்கலவ மேல்விரித்த தோகை - தழற்குலவு தீம்புகை யூட்டுஞ் செறிகுழலார் போலுங்கார் யாம்பிரிந்தோர்க் கென்னா மினி.”

ஒருசொல் நான்கடி மடக்கு

நான்கு அடிகளாலான பாவில் ஒரு சொல்லே எல்லாவடி களிலும் மடங்கி வந்து வேறு வேறு பொருள் வரத் தொடுப்பது ஒரு சொல் நான்கடி மடக்கு என்னும் அணியாம்.

எடு :

இதனை யமகம் என்று கூறுவர்.

உமாதர னுமாதர

னுமாதர னுமாதர

னுமாதர னுமாதர

னுமாதர னுமாதர

இதில் ‘உமாதரன்' என்ற சொல்லே எல்லா வடிகளிலும் மடங்கி வந்தமை காண்க.

ஒருவினைச் சிலேடை

தொடர்ந்து நின்ற சொற்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக் கப்பட்டுப் பலபொருள் தந்து ஒரு வினையான் முடிவது ஒருவினைச்சிலேடையாகும்.

எடு :-

“அம்பொற் பணைமுகத்துத் திண்தோட் டணிநாகம் வம்புற்ற வோடை மலர்ந்திலங்க - உம்பர் நவம்புரியும் வானதியு நாண்மதியு நண்ணத்

தவம்புரிவார்க் கின்பம் தரும்.

இது விநாயகருக்கும் மலைக்குஞ்சிலேடை.