உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

விநாயகர்மேற் செல்லுங்கால்

455

பொன் - பொலிவு, பணை - பருத்த, முகம் - முகம், கோடு - மருப்பு, நாகம் - யானை, வம்பு - கச்சு, உறுதல் - கட்டுதல். ஓடை பட்டம். மலர்தல் - பரத்தல், உம்பர் - முடி. இன்பம் - இந்திர பதம் முதலாய போகம்.

மலைமேற் செல்லுங்கால்

-

பொன் கனகம். பணை

-

மூங்கில். முகம் - பக்கம். கோடு சிகரம். நாகம் - மலை. வம்பு - மணம். உறுதல் - உண்டாதல். ஓடை - - வாவி. ஒருமரமுமாம். மலர்தல் - பூத்தல். உம்பர் - மேல். இன்பம்

-

தவத் தொழில் புரிவார்க்கு அவர் வேண்டிய உணவுகளுந் தண்ணீருமாகிய பலவகைப் பண்டங்கள்.

இஃது இன்பந்தரும் என்னும் ஒருவினையான் முடிந்தது.

ஒழித்துக் காட்டணி

ஒரு பொருளை ஓரிடத்து இல்லை யென ஒழித்து வேறோ ரிடத்து உண்டென நியமித்தல் ஒழித்துக் காட்டுதல் என்னும் அணியாம்.

எடு :-

“வெஞ்சிலையே கோடுவன மென்குழலேசோருவன.

ஒழிப்பணி

99

ஒரு தருமத்தை யாரோபித்தற் பொருட்டு ஒரு தருமத்தை மறுப்பது ஒழிப்பணியாகும். இவ்வணி, வெற்றொழிப்பு, காரண வொழிப்பு, வேறுபாட்டொழிப்பு, மயக்க வொழிப்பு, வல்லோ ரொழிப்பு, வஞ்சகவொழிப்பு என அறுவகைப்படும்.

ஒழிப்புயர்வு நவிற்சியணி

இது உயர்வு நவிற்சியணி வகைகளுள் ஒன்று. உவமேயத்தை அதன் சொல்லாற் சொல்லாமல், உவமானச் சொல்லினால் இலக் கணையாகக் கூறி ஒழித்தல், ஒழிப்புயர்வு நவிற்சியணியாம். எடு :-

“பைந்தொடிநின் சொல்லில் அமுதுளதாற் பாமரர்கள் இந்துவிடத் துண்டென்ப ரே.

-