உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

-

457

(இ-ள்) மை பம்மும் (தேர்ப்பாகனே உனது தேரைப் பின்னிட்டு விரைந்த) மேகம், (இதன் முன்சென்று தேர்வரும் வழிமேல் விழிவைத்த இல்லறக் கிழத்தியிருந்த நகரின்கட்) படியும். பம்மும் பம்மும் அதனால் விண்மீன் கணங்களும் மறையும்; இருள் செய்யும். (அவ்வாறு இருள் உண்டாகுமிடத்து) அம்மம்ம- ஐயோ! ஐயோ! மாமை பம்முமம் மமும் மேமம்பாம் - அழகியமார்பை பசலை தழைவதாம்.

ஒட்டிய நிரோட்டியம்

-

ஓட்டியம், நிரோட்டிய மென்னும் இரண்டு தன்மையு மொரு செய்யுளகத்து இரண்டு கூறுபாட்டால் நடைபெறத் தொடுப்பது ஓட்டிய நிரோட்டியம் என்னும் அணியாம்.

எடு :-

“வதுவையொருபோது வழுவாது வாழும்

புதுவைவரு மாதுருவம் பூணு - முதுமைபெறு நாதனங்க னையே நன்றறிந்தார்க் கேயடியேன் றாதனென நெஞ்சே தரி.”

இதில் முன்னடியிரண்டும் ஓட்டியமும் பின்னடியிரண்டும் நிரோட்டியமுமாக வந்த வோட்டிய நிரோட்டியம்.

ஓராதுரைத்தல் அணி

சொல்லுங் காலத்திற்கு ஏற்றதானதொரு பொருள் தரும் சொற்றொடர் பின்னிகழ்வதை யொட்டிச் சொல்வோர் கருதாத மற்றொரு பொருளைக் குறித்து நிற்குமாயின் அது ஓராதுரைத்தல் அணியாம்.

கடைநிலைத் தொழிற்றீவகம்

செய்யுளின் இறுதியில் நின்ற தொழிலைக் குறிக்கும் ஒரு சொல் அச்செய்யுளின் பலவிடங்களில் நிற்கும் மற்றைய சொற் களோடு சென்றியைந்து பொருள் தருவது கடைநிலைத்

தொழிற்றீவகமாகும்.

எடு :-

“துறவுளவாச் சான்றோ ரிளிவரவுந் தூய பிறவுளவா வூன்றுறவா வூணும் - பறைகறங்கக்