உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

461

முதலிய வுவமான வாக்கியப் பொருளுக்கும் யாது அது என்ற சொற்களால் ஒற்றுமை கூறப்பட்டது.

காரண ஆராய்ச்சியணி

குறைவில்லாத காரணமிருந்துங் காரியம் பிறவாமையைச் காரண ஆராய்ச்சியணியாகும்.

சொல்லுவது

வடநூலார் ‘விசேடோக்தியலங்கார’ மென்பர்.

எடு :-

"இறைமதனாந் தீப மெரிவுறா நின்றும்

குறைவிலது நேயமென்னோ கூறு.'

இதனை

இதில், விளக்காகிய காரணமிருந்துங் காரியம் பிறவாமை காண்க. நேயம் என்பது விருப்பமும் நெய்யுமாம்.

காரகவேது

கருத்தா, பொருள், செயல், கருவி, காலம், இடம் ஆகிய காரணமாகக் கூறும் அணி காரகவேதுவாகும்.

எடு :-

“எல்லைநீர் வையகத் தெண்ணிறந்த வெவ்வுயிர்க்கும் சொல்லரிய பேரின்பந் தோற்றியதால் - முல்லைசேர் தாதலைத்து வண்கொன்றைத் தாரலைத்து வண்டார்க்கப் பூதலத்து வந்த புயல்.

99

காரணமுந்துறூஉங் காரியநிலை

இதுவும் ஏதுவணியின் பாற்படும். காரணத்திற்கு முன்னர்க்

காரியம் நிகழ்வதாம்.

எடு :-

“தம்புரவு பூண்டோர் பிரியத் தனியிருந்த

வம்புலவு கோதையர்க்கு மாரவேள்

அம்பு

பொருமென்று மெல்லாகம் புண்கூர்ந்த மாலை

வருமென் றிருண்ட மனம்.”

காரணப் புனைவிலி புகழ்ச்சி யணி

இது புனைவிலிபுகழ்ச்சியணி வகைகளுள் ஒன்று.உவமானமாகிய காரணத்தால் உவமேயமாகிய காரியந் தோன்றுதலாம்.